ஆப்நகரம்

எஸ்பிபி போல நாம் நடக்க வேண்டும்..! காமெடியன் செந்தில் உருக்கம்

எஸ்பிபி மறைவு பற்றி செந்தில் உருக்கமாக இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.

Samayam Tamil 26 Sep 2020, 9:27 am
பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் நேற்று உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் மரணமடைந்த நிலையில் அவரது உடல் இன்று போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளது. எஸ்பிபியின் பண்ணை தோட்டத்தில் அவரது இறுதி சடங்குகள் செய்வதற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகிறது.
Samayam Tamil SPB, Senthil


ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய சினிமா துறையில் பல ஆயிரம் பாடல்களால் ரசிகர்களை ஈர்த்த அவரது மறைவு அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அவரை பற்றி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கண்ணீருடன் பதிவிட்டு வரும் நிலையில், பிரபலங்களும் எஸ்பிபி பற்றி உருக்கமாக பேசி வருகிறார்கள்.

நடிகர் செந்தில் வீடியோ வடிவில் எஸ்பிபிக்கு இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது..

'அண்ணன் எஸ்பிபி அவர்கள் இருந்தார், இன்று மறைந்தார். அவர் பாட்டு மட்டும் மறையவில்லை. அதை காலம் காலமாக கேட்டு கொண்டே இருக்கலாம். அவர் கிட்டத்தட்ட 42 ஆயிரம் பாடல்களுக்கும் மேல் பாடி இருக்கிறார். பல விருதுகளை வாங்கி இருக்கிறார். 1986 - 87ல் சிங்கப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் நாங்கள் கலந்துகொண்டோம். அவர் பாடினார் அனைவரும் கேட்டோம். நான் காமெடி செய்ததை ரசித்து பார்த்தார்.

அன்று ரூமில் ஒன்றாக சாப்பிட்டோம். அவர் பாடும் போது இளையராஜா காம்பினேஷன் அவ்வளவு அற்புதமாக இருக்கும். அந்த பாடல்களை கேட்டுக்கொண்டே இருக்கலாம். நான் மட்டும் இல்லை, அவருக்கு எத்தனையோ ரசிகர்கள். அவர் நன்றாக பழகுவார், நல்லா சிரிப்பார், எல்லாரிடமும் நல்ல பெயர் வாங்குவார். அவரை போல நாம் எல்லாம் நடந்துகொள்ள வேண்டும்.

அவருக்கு தமிழக அரசு, அரசு மரியாதை கொடுத்திருக்கிறது. அரசுக்கு ரொம்ப நன்றி. அவரது குடும்பத்தாருக்கும், பிள்ளைகளுக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்