ஆப்நகரம்

இந்தியாவே அவள் படத்தைப் பார்த்து பயப்படும்: சித்தார்த்

இந்தியாவே அவள் படத்தைப் பார்த்து பயப்படும் என்று நடிகர் சித்தார்த் கூறியுள்ளார்.

TNN 10 Oct 2017, 2:24 am
இந்தியாவே அவள் படத்தைப் பார்த்து பயப்படும் என்று நடிகர் சித்தார்த் கூறியுள்ளார்.
Samayam Tamil actor siddharth says about his upcoming thriller tamil movie aval
இந்தியாவே அவள் படத்தைப் பார்த்து பயப்படும்: சித்தார்த்


மிலிண்ட் ராவ் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் உருவாகி வரும் படம் அவள். இதில், ஆண்ட்ரியா ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும், சுரேஷ், அதுல் குல்கர்னி, அனிஷா விக்டர் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். ஜில் ஜங் ஜக் படத்தைத் தொடர்ந்து இப்படத்தில் தயாரித்து நடித்துள்ளார்.

This house has a different story to tell. Watch the trailer to know https://t.co/7CNLLHuzru#Gruham @GruhamTheFilm — Andrea Jeremiah (@andrea_jeremiah) October 9, 2017 தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வரும் இப்படம் முழுக்க முழுக்க த்ரில்லர் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இதில், சித்தார்த், ஆண்ரியா, அதுல் குல்கர்னி ஆகியோர் உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய சித்தார்த் கூறுகையில், கிட்டத்தட்ட 12 வருடத்திற்குப் பிறகு அதுல் குல்கர்னியுடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சியளிக்கிறது. இப்படத்தின் இயக்குனர் மிலிண்ட் ராவும், நானும், மணிரத்னத்திடம் உதவியாளராக பணியாற்றினோம். அப்போது இருவருக்குள்ளும் ஏற்பட்ட நட்பின் அடையாளமாக தற்போது அவள் என்ற த்ரில்லர் படம் உருவாகியிருக்கிறது. ஹாலிவுட் படங்களில் சில படங்கள் மக்களை பயமுறுத்தும் அளவிற்கு இருக்கும். ஆனால், பாலிவுட் படங்கள் அப்படி இருந்ததில்லை. இந்நிலையில், இந்தியாவே பயப்படும் அளவிற்கு ஒரு படத்தை எடுக்க நினைத்தேன். அப்படி வந்த படம் தான் இந்த அவள். இப்படம் நிச்சயம் அனைவரையும் பயமுறுத்தும் படமாக இருக்கும். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை உருவாக்கி இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்