ஆப்நகரம்

அதே பழைய ஸ்டைல்ஸ்.. போதவே போதாது: சிம்புவின் புதிய அவதாரம்!

பேஷன் மற்றும் லைப்ஸ்டைல் தயாரிப்புகளின் இ-காமர்ஸ் நிறுவனமான மிந்த்ரா நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட்டுள்ளார் நடிகர் சிலம்பரசன்.

Samayam Tamil 3 Sep 2021, 6:32 pm
'மாநாடு' படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் சிம்பு அடுத்ததாக கெளதம் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்காக நம்ப முடியாத அளவிற்கு உடல் எடையை குறைத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார். இந்நிலையில் சிம்பு, தற்போது ஃபேஷன் மற்றும் லைப்ஸ்டைல் தயாரிப்புகளின் இ-காமர்ஸ் நிறுவனமான மிந்த்ரா நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Samayam Tamil Silambarasan
Silambarasan


சிம்பு என்றால் படப்பிடிப்பு தளத்திற்கு ஒழுங்காக வர மாட்டார். தயாரிப்பாளர்களுக்கு அவரால் கஷ்டம் என்பதை போன்ற குற்றச்சாட்டுகளை சமீபகாலமாக உடைந்தெறிந்து வருகிறார் சிம்பு. அந்த வகையில் வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் உடல் எடைக்காக அதிகம் ட்ரோல் செய்யப்பட்ட சிம்பு, கடந்த பொங்கலுக்கு வெளியான ஈஸ்வரன் படத்தின் மூலம் உடல் எடையை முழுவதுமாக குறைத்து ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தார்.

அதனை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து முடித்த சிம்பு தற்போது கெளதம் மேனன் இயக்கத்தில் நடிக்கவுள்ள வெந்து தணிந்தது காடு படத்திற்காக 20 கிலோ எடையை குறைத்து சிறுவயது பையன் லுக்கில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த பலரும் சிம்பு இது என ஆச்சரியத்தில் வாயடைத்து போனார்கள்.

போலீஸ் தற்கொலைக்கு தூண்டுகிறது: நீதிபதி முன்பு கதறி அழுத மீரா மிதுன்!
இந்நிலையில், நடிகர் சிம்பு ஃபேஷன் மற்றும் லைப்ஸ்டைல் தயாரிப்புகளின் இ-காமர்ஸ் நிறுவனமான மிந்த்ரா நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட்டுள்ளார். இதை மிந்த்ரா நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதற்காக வெளியிட்டுள்ள வீடியோவில் சிம்புவின் யங் லுக் அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் படு வேகமாக வைரலாகி வருகிறது.


சிம்பு நடிப்பில் மாநாடு, மஹா படங்கள் தயாராகி ரிலீசுக்கு காத்து கொண்டிருக்கின்றன. தற்போது கெளதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு இருவரும் மூன்றாவது முறையாக இணையும் படம் என்பதால் இப்போதே இந்தப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்