நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் மளமளவென வளர்ந்து இன்று முன்னணி நடிகராக ஜொலித்து கொண்டிருக்கின்றார். சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்து சாதித்து காட்டிய சிவகார்த்திகேயன் தொடர் வெற்றிகளின் மூலம் இந்த இடத்தை அடைந்துள்ளார்.
எதிர்நீச்சல், மான் கராத்தே, ரஜினி முருகன், ரெமோ என படத்திற்கு படம் இவருக்கு ரசிகர்கள் கூடிக்கொண்டே சென்றனர். இந்நிலையில் தான் 2018 ஆம் ஆண்டு பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா திரைப்படம் வெளியானது.
மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் ட்ரைலர் வெளியானபோது நடிகர் அருண் விஜய் சர்ச்சையை கிளப்பும் வகையில் ஒரு ட்வீட் போட்டிருந்தார்.
இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசினை வெல்லுங்கள்
சிவகார்த்திகேயனை கிண்டல் செய்யும் வகையில் அந்த ட்வீட் இருந்தது. இதையடுத்து இருவரது ரசிகர்களும் ட்விட்டரில் மோதலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் படத்தில் அருண் விஜய்க்கு பதிலடி தருமாறு சிவகார்த்திகேயன் ஒரு வசனம் பேசுவார்.
இவ்வாறு இவர்களின் மோதல் நீண்டுகொண்டே சென்றது. இந்நிலையில் தற்போது ட்விட்டரில் இருவரும் பேசிக்கொண்டது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அருண் விஜய்யின் மகன் அர்னவ் ஓ மை டாக் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அப்படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இந்நிலையில் இன்று பிறந்தநாளை கொண்டாடும் அருண் விஜய்யின் மகனான அர்னவ்விற்கு சிவகார்த்திகேயன் ட்விட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து அருண் விஜய்யும் சிவகார்த்திகேயனின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த ட்வீட் தான் சமூகத்தளங்களில் ட்ரெண்டாகிவருகின்றது. எனவே இந்த ட்விட்டர் பதிவின் மூலம் இரு நடிகர்களுக்குள்ளும் எந்த பிரச்சனையும் இல்லை என உறுதிசெய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.