ஆப்நகரம்

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி?

சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள ஒரு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Samayam Tamil 13 Nov 2018, 12:28 pm
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள ஒரு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
Samayam Tamil siva


நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘சீமராஜா’. இந்தப் படம் படு தோல்வியை தந்தது. இதையடுத்த ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன். இந்தப் படம் சயின்ஸ் பிக்ஷன் சம்பந்தப்பட்ட படமாக உருவாகிறது.இதற்கான பணிகள் கவனித்து வருகிறார் இயக்குனர் ரவிக்குமார்.

இதைத் தொடர்ந்து, அடுத்ததாக இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன். இந்த படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நடிக்க சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும் என்றும், சாய் பல்லவி சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிப்பார் என்றும் படக்குழு தரப்பில் சொல்லப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்