ஆப்நகரம்

கை, கால்கள் நல்லாதானே இருக்கு- விஜயலட்சுமியை விளாசும் கன்னட சூப்பர் ஸ்டார்

திரையுலகினரிடமிருந்து பண உதவி எதிர்பார்ப்பதாக நடிகை விஜயலட்சுமி கூறி வந்த நிலையில், அவரை காட்டமாக விமரிசித்துள்ளார் நடிகர் சிவராஜ் குமார்

Samayam Tamil 26 Mar 2019, 10:52 am
உடலில் குறையுள்ளவர்கள் கூட உழைத்து வாழும் போது, நல்ல உடல்நிலையை பெற்றுள்ள நடிகை விஜயலட்சுமியால் ஏன் நன்றாக வாழ முடியாது என பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார் கடுமையாக சாடியுள்ளார்.
Samayam Tamil விஜயலட்சுமியை விளாசும் கன்னட சூப்பர் ஸ்டார்


தமிழில் சூர்யா, விஜய் நடித்து ஃபிரெண்ட்ஸ் படத்தில் அறிமுகமான விஜயலட்சுமி பிற்காலத்தில் கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். பிறகு, தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வந்த அவர், தொடர்ந்து குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்தார்.

அண்மையில் அவருக்கு ரத்த அழுத்தம் ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் போது, அவருடைய அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. இதனால் கையில் வைத்திருந்த மொத்த பணமும் சிகிச்சைக்கு செலவாகிவிட்டதாக கூறினார்.

இதனால் நடிகை விஜயலட்சுமியின் குடும்பத்தினர் கன்னட திரைத்துறையினர் உதவியை எதிர்பார்ப்பதாக தெரிவித்தனர். அதை தொடர்ந்து சில நடிகர்கள் தனிப்பட்ட முறையிலும், கன்னட நடிகர் சங்கமும் விஜயலட்சுமி குடும்பத்தாருக்கு நிதி வழங்கின.

சிவராஜ் குமார், கன்னட திரைப்பட நடிகர்


அப்போது தனக்கு உதவி செய்வதாக கூறி பிரபல கன்னட நடிகர் ரவி பிரகாஷ் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினர். இதுதொடர்பாக கருத்து கூறி ரவி பிரகாஷ், மனிதாபிமான அடிப்படையில் விஜய்லட்சுமிக்கு உதவி செய்தேன். ஆனால் அதை அவர் தவறாக பயன்படுத்திக் கொண்டார் என குற்றம்சாட்டினார்.

இதற்கிடையில் சிவராஜ் குமார், புனித் ராஜ்குமார் எனக்கு உதவி செய்யவில்லை என்று கூறி விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டார். இது குறித்து சிவராஜ் குமார் கூறியதாவது,' விஜயலட்சுமிக்குத் தொடர்ந்து உதவி செய்து கொண்டே இருக்க முடியாது. அனைத்தையும் கடவுள் பார்த்துக் கொள்வார். ஒருவர் சொல்வது எல்லாம் உண்மையா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும், உடலில் குறையுள்ள மனிதர்கள் கடினமாக உழைத்து வாழும் போது, கை கால்கள் நன்றாக இருப்பவரால் ஏன் தன்னை கவனித்துக் கொள்ள முடியவில்லை என அவர் கேள்வி எழுப்பினார். ஒருவருக்கு உதவி செய்யவதற்கு உள்ளிருந்து உணர்வு வரவேண்டும் என இறுதியாக சிவராஜ் குமார் தெரிவித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்