ஆப்நகரம்

'எதற்கும் துணிந்தவன்' படம் வெளியாகும் போது திரையரங்குகள் திருவிழாவாக இருக்கும் - நடிகர் சூரி!

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 'எதற்கும் துணிந்தவன்' படம் குறித்து சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார் நடிகர் சூரி.

Samayam Tamil 28 Aug 2021, 9:10 am
சூரரை போற்று படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார். கொரோனா லாக்டவுன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட இந்தப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் துவங்கியது. இந்நிலையில் இந்தப்படம் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை நடிகர் சூரி பகிர்ந்துள்ளார்.
Samayam Tamil எதற்கும் துணிந்தவன்
எதற்கும் துணிந்தவன்


பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள்மோகன் நடிக்கிறார். இவர் டாக்டர் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இந்தப்படத்தில் நடிகர் சூரி, சத்யராஜ், திவ்யா, வினய், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, சுப்பு பஞ்சு, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் கையில் நீண்ட வாளுடன் சூர்யா, திரும்பி நடந்து செல்வது போன்ற படத்தின் போஸ்டர் ஒன்று கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வெளியாகி வைரலானது. அதனை தொடர்ந்து சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஜூலை 22 ஆம் தேதி எதற்கும் துணிந்தவன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர் படக்குழுவினர். இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகர் சூரிக்கு பிறந்தநாள்: கேக் வெட்டி கொண்டாடிய 'எதற்கும் துணிந்தவன்' படக்குழுவினர்!
இந்நிலையில் நேற்றைய தினம் பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் சூரி இந்தப்படம் குறித்து கூறும்போது, வழக்கமான பாண்டிராஜ் பட பாணியில் குடும்ப செண்டிமென்ட் மற்றும் ஆக்சன் காட்சிகள் நிறைந்த படமாக இருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் இந்தப்படத்தில் கதாநாயகியின் தாய் மாமா கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளதாகவும், படம் வெளியாகும் போது திரையரங்குகள் திருவிழா போல் காட்சியளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். ரசிகர்களுக்கு

பாண்டிராஜ் படத்தை முடித்தவுடன் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா. வாடிவாசல் என தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். கடந்த மாதம் இந்தப்படத்தின் டைட்டில் லுக் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்