ஆப்நகரம்

நடிப்பையே விட்டு விடுகிறேன் சவால் விட்ட சந்தீப் கிஷன்!

கண்ணாடி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியின் போது நடிப்பையே விட்டு விடுகிறேன் என்று நடிகர் சந்தீப் கிஷன் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 4 Jul 2019, 10:11 am
இயக்குநர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் மாநகரம் பட புகழ் சந்தீப் கிஷன் நடித்திருக்கும் படம் கண்ணாடி. ஹாரர் திரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்தில் புதுமுக அனன்யா ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தின்பத்திரைக்கையாளர் சந்திப்பில் நடிகர் சந்தீப் கிஷன் ரசிகர்களுக்கு சவால் விட்டு பேசினார்.
Samayam Tamil Kannadi


சந்தீப் கிஷன் கூறியது, கண்ணாடி டீஸர் பார்த்த பலரும் பாஸிட்டிவான கருத்துக்களைக் கூறியிருந்தார்கள். எனக்கு இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தான் படம் வெளியாகும் என்ற நிலை இருக்கிறது.நான் என்ன தப்பு செய்கிறேன் என எனக்கே தெரியவில்லை. நான் நடிக்க வந்து 12 வருடங்கள் ஆகின்றது. நான் எனக்காக படம் நடிக்கவில்லை. பார்வையாளர்களுக்காக தான் நடிக்கிறேன். ஆனால் இப்பொழுது படம் நடிப்பது என்றால் பயமாக இருக்கிறது. ஏனென்றால், ஒவ்வொரு படமும் வெளியிடுவதற்கு பெரும் போராட்டம்வேண்டியிருக்கிறது.

நான் நடித்த நரகாசூரன் படம் இன்னும் வரவில்லை. அந்த இயக்குநர் என்ன கஷ்டப்படுகிறார் என்பதுஎனக்குத் தெரியும். இப்படத்திற்காகவும் ஒவ்வொருவரும் போராடிக் கொண்டு தான் இருக்கிறோம். தரமான படமாக வரவேண்டும் என்பதற்காக கடினமாக உழைத்திக்கிறோம். இப்படம் நல்ல படமாக வரவேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டுமே இப்படத்தை எடுத்திருக்கிறோம்.

மாயவன் படத்தை ஆன்லைனில் பார்த்த பலரும் நன்றாக இருக்கிறது என்று கூறினார்கள். இதன் பிறகு ‘கசடதபற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இப்படம் வெளியாகும்போது இது எல்லோராலும் பேசும்படமாக இருக்கும். நான் எப்போதுமே எல்லோரும் செய்வதை செய்ய ஆசைப்படாதவன்.வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன். பேய் மற்றும் விலங்குகளை வைத்து படமெடுத்தால் வெற்றியாகும் என்றார்கள்.நான் பேய் படங்களில் நடிக்கவே மாட்டேன் என்று கூறினேன். எல்லோரும் செய்வதை செய்ய நான் தேவையில்லை. இதுவரை 24 படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் இப்படத்தைத்தான் தயாரிக்க வேண்டும் என்று தோன்றியது.

இதை பேய்ப்படம்என்கிறார்கள். இப்படத்தில் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் கதையின் அடிப்படையே மாறும். மேலும், 2043 வருடத்திலிருந்து ஆரம்பிக்கும். எதிர்காலத்தில் ஆரம்பித்து நிகழ்காலத்தில் முடியும். இது வித்தியாசமான ஒரு அனுபவத்தை தரும். இந்தப்படத்தை பார்த்து முடிக்கும் போது ஒரு நல்ல படம் பார்த்த திருப்தியைமட்டுமே தரும். ஒரு பேய்ப்படம் என்ற நினைப்பு கண்டிப்பாக வராது. அப்படி யாராவது இதைப்பேய் படம் என்று சொன்னால் நான் நடிப்பதையே விட்டுவிடுகிறேன் என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்