ஆப்நகரம்

தமிழக பாஜக தலைவர் தமிழிசையை விமர்சிப்பதா? சூர்யா நற்பணி இயக்கம் கண்டனம்

சூர்யாவை விமர்சித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை ரசிகர்கள் தரமற்று விமர்சிப்பதற்கு சூர்யா நற்பணி இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

TNN 10 Sep 2017, 3:48 pm
சூர்யாவை விமர்சித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை ரசிகர்கள் தரமற்று விமர்சிப்பதற்கு சூர்யா நற்பணி இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil actor suriya condemned his fans an account of tamilisai controversy
தமிழக பாஜக தலைவர் தமிழிசையை விமர்சிப்பதா? சூர்யா நற்பணி இயக்கம் கண்டனம்


இது தொடர்பாக சூர்யா நற்பணி இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீட் தேர்வு குறித்து சூர்யா தனது கருத்துக்களை பதிவிட்டிருந்தார். இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சூர்யா கோடிகளுக்கு நடித்து வந்த போது, நாங்கள் தெருக்கோடிகளில் பணியாற்றிக் கொண்டிருந்தோம். இவர்கள் போன்றோரை மக்கள் பலரும் கண்காணித்து, பின்பற்றி வருகின்றனர். இவர்கள் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை தெரிவிப்பதை முதலில் நிறுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதனை தாங்க முடியாத சூர்யா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தமிழிசைக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார். ஆனால், இதனை சூர்யா ஒரு போதும் ஏற்க மாட்டார். கருத்து தளத்தில் வரும் விமர்சனங்களை நேர்மறையாக எதிர்கொள்வதும் நமது ஆரோக்கியமான செயல்பாடுகளால் எதிர்வினையாற்றுவதுமே சூர்யா நமக்கு கற்றுக்கொடுத்த பாடம். அதைவிடுத்து, சமூக வலைதளங்களில் கருத்து பதிவிடுவது தவறான செயல். இதனை சூர்யா ஒரு போதும் ஏற்க மாட்டார்.

அகரத்தைப் பற்றியும், சூர்யா பற்றியும் சமூகத்தில் உள்ளவர்களுக்கு நன்கு தெரியும். செயல் அது ஒன்றே மிக உயர்ந்த செயல் என்ற தாரக மந்திரத்தைக் கொண்டு தான் மன்றம் இயங்கி வருகிறது. விளம்பரத்திற்காக எதையும் செய்யாதீர்கள். உங்கள் மனதார மற்றவர்களுக்கு உதவுங்கள் என்ற சூர்யாவின் கூற்றுப்படியே கடந்த 20 வருடங்களாக இயக்கம் செயல்பட்டு வருகிறது.

ஒருவர் நம்மை கேள்வி கேட்பதால், அவரிடம் நம் உண்மைத் தன்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. நம் செயல்கள் யாரையும் காயப்படுத்தாமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன் அளித்தால் போதுமானது. சூர்யா ரசிகர்களின் செயல் ஏதேனும், தமிழிசையை காயப்படுத்தியிருந்தால் அதற்கான வருத்தத்தை தெரிவித்து கொள்கிறோம் என்று அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்