நடிகர் சூர்யா தான் நடித்து வெளியான ‘24’ என்ற திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ளதற்காக தன்னுடன் பணியாற்றிய படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
சூர்யா, சமந்தா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘24’. அறிவியல் சார்ந்த திரைப்படமான இதற்கு வெள்ளிக்கிழமையன்று மூன்று தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன.
இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள நடிகர் சூர்யா, செல்ஃபி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தேசிய விருது பெற்ற எல்லோருக்கும் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். மேலும், தன்னுடன் பணியாற்றிய '24' படக்குழுவினருக்கும் தேசிய விருது தேர்வுக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
“ஏ.ஆர்.ரஹ்மான் கூறியதைப்போல இந்த படம் அனைவருக்கும் முக்கியமான படமாக அமைந்தது. இந்த விருதை பெற்றவர்கள் அனைவருக்கும் அவர்கள் பணியாற்றிய முந்தைய படங்களுக்கும் சேர்த்து கிடைத்த மரியாதை இது. மனதுக்கு பிடித்த படத்துக்கு தேசிய அங்கீகாரம் கிடைத்திருப்பது ஊக்கமளிக்கிறது.” என்றும் அவர் கூறியுள்ளார். Congratulations to the all winners!!@DOP_Tirru #AmitRay&Subrata #NationalFilmAwards #24theMovie #VikramKumar @arrahman @rajsekarpandian pic.twitter.com/ZNBc4ogHzO — Suriya Sivakumar (@Suriya_offl) April 7, 2017