ஆப்நகரம்

சிம்புவுக்கு சீக்கிரமே திருமணம் நடக்க டி ராஜேந்தர் பிரார்த்தனை

சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டி டி ராஜேந்தர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

TNN 8 Sep 2017, 3:35 pm
சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டி டி ராஜேந்தர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
Samayam Tamil actor t rajendar at tirupati praying for simbu to get married soon
சிம்புவுக்கு சீக்கிரமே திருமணம் நடக்க டி ராஜேந்தர் பிரார்த்தனை


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிம்பு. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்ப்பை ஏற்படுத்த இனிமேல் நடிக்க மாட்டேன் என்று முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தயாரிப்பிலும், பாடுவதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறாராம். இந்நிலையில், இவரது தந்தை இன்று திடீர் விஜயமாக திருப்பதி சென்று ஏழுமலையான் தரிசனம் செய்துள்ளார்.



பின்னர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: என்னுடைய மகன் சிலம்பரசனுக்கு திருமணம் நடக்க வேண்டும். நான் பெண் பார்ப்பதை விட, அவராக பெண் பார்த்தால் நல்ல தங்கமான பெண்ணாகவும், ஐஸ்வர்யம் நிறைந்த ஒரு பெண்ணாகவும் இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், நல்லவொரு மணப்பெண் அமைந்து என் மகன் சிலம்பரசனுக்கு திருமணம் நடக்க வேண்டும். அதேபோல் என்னுடைய இளைய மகன் குரசலரசனுக்கு நல்ல பேர் கிடைக்க வேண்டும். அவருக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காகத் தான் அதிகாலையில் திருப்பதி வந்து சாமி தரிசனம் செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Actor T. Rajendar at tirupati praying for Simbu to get married soon

அடுத்த செய்தி

டிரெண்டிங்