ஆப்நகரம்

காதலர்களுக்கு உதாரணமாக திகழும் காதல் ஜோடி தல அஜித் – ஷாலினி: 19ஆவது ஆண்டு திருமண நாள் கொண்டாட்டம்!

காதல் திருமணம் செய்து கொண்ட தல அஜித் மற்றும் ஷாலினி ஜோடி இன்று தங்களது 19ஆவது ஆண்டு திருமண நாளில் அடியெடுத்து வைத்துள்ளனர்.

Samayam Tamil 24 Apr 2019, 11:49 am
காதல் திருமணம் செய்து கொண்ட தல அஜித் மற்றும் ஷாலினி ஜோடி இன்று தங்களது 19ஆவது ஆண்டு திருமண நாளில் அடியெடுத்து வைத்துள்ளனர்.
Samayam Tamil Shalini


தமிழ் சினிமாவில் காதல் திருமணம் செய்துக் கொண்ட நடிகர் , நடிகைகளில் இன்றளவும் சிறந்த காதல் ஜோடியாக திகழும் அஜித்-ஷாலினி இருவரும் கடந்த 2000வது ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி திருமணம் செய்துக் கொண்டனர்.

மிகவும் பிரபலமான இவர்களின் காதல் கதை 1999ம் ஆண்டு வெளியான 'அமர்க்களம்' படத்தில் ஜோராக ஆரம்பித்தது. குழந்தை நட்சத்திரமாக தமிழ், மலையாளம் என கலக்கிய ஷாலினி, திருமணத்திற்கு பின்னர் திரையுலக வாழ்க்கையை துறந்த ஷாலினி, தனது காதல் கணவர் அஜித், வாழ்வில் சந்தித்த தோல்வியிலும், வெற்றியிலும், கைக்கோர்த்து திருமண வாழ்க்கையில் ஜொலித்து வருகிறார். தற்போது திருமணம் ஆகி 19 ஆண்டுகள் ஆன நிலையில் அனோஷ்கா மற்றும் ஆத்விக் குமார் என்ற ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

17வது ஆண்டு திருமண நாளில் கால்பதிக்கும் தல அஜித் – ஷாலினி

ஷாலினிக்கு அஜித் கொடுத்த பிறந்த நாள் பரிசு!!

அமர்களமாக தொடங்கி 16வது ஆண்டில் ஜொலிக்கும் அஜித்-ஷாலினி காதல்


அண்மையில், அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படம் உலகம் முழுவதும் வெளியாகி கிட்டத்தட்ட ரூ.180 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிங்க் என்ற பாலிவுட் படத்தின் தமிழ் ரீமேக்கில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இப்படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்திற்கு நேர்கொண்ட பார்வை என்று டைட்டில் வைத்துள்ளனர். ஒரே ஆண்டில், தல அஜித்தின் அடுத்தடுத்த படங்கள் வெளியாவது அஜித் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இமான் அண்ணாச்சி வீட்டில் 41 சவரன் நகை கொள்ளை: அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார்!

அஜித்திற்கும், ஷாலினிக்கும் காதல் உண்டானது எப்படி தெரியுமா?

இமான் அண்ணாச்சி வீட்டில் 41 சவரன் நகை கொள்ளை: அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார்!
பொங்கலுக்கு விஸ்வாசம் வெளியானது. அடுத்து, நேர்கொண்ட பார்வை படத்தின் அறிவிப்பு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், வெளியீட்டு தேதி என்று அடுத்தடுத்து அறிவிப்பு வந்தது. தற்போது அஜித்தின் 19ஆவது ஆண்டு திருமண நாள். இதையடுத்து, அஜித்தின் பிறந்தநாள். அடுத்து நேர்கொண்ட பார்வை ரிலீஸ். இப்படி தொடர்ந்து ஒரே ஆண்டில், அஜித் மாஸ் காட்டவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்