ஆப்நகரம்

King of TRP Thala Ajith: டிவி டிஆர்பியில் புதிய சாதனை படைத்த தல அஜித்தின் விஸ்வாசம்!

தல அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படம் டிவி டிஆர்பியில் புதிய சாதனை படைத்துள்ளது.

Samayam Tamil 9 May 2019, 3:48 pm
தல அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படம் டிவி டிஆர்பியில் புதிய சாதனை படைத்துள்ளது.
Samayam Tamil thala


வீரம், வேதாளம் மற்றும் விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து தல அஜித் மற்றும் சிவா கூட்டணியில் வெளியான 4ஆவது படம் விஸ்வாசம். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில், அஜித்துடன் இணைந்து நயன்தாரா, கோவை சரளா, யோகி பாபு, விவேக், ரோபோ சங்கர், தம்பி ராமையா, அனிகா, சுஜாதா சிவகுமார், ஜெகபதி பாபு ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த இப்படம் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரூ.208 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என்று விக்கிபீடியா பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் வெளியாகி 100 நாட்களுக்கு மேல் ஆன நிலையில், அஜித்தின் 48ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சன் தொலைக்காட்சியில் விஸ்வாசம் படம் திரையிடப்பட்டது.

தொலைக்காட்சியில் திரையிடப்பட்ட இப்படத்தின் மூலம் சன் டிவியின் டிஆர்பி ரேட்டிங் அதிகரித்ததோடு, இப்படத்தை 18.1 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து மகிழ்ந்துள்ளனர். குடும்பங்கள் கொண்டாடும் படம் என்பதால், இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றே கூறலாம்.

விஸ்வாசம் படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இதனை மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளது. மற்ற படங்களாக பிச்சைக்காரன், பாகுபலி 2, சர்கார் ஆகிய படங்களுக்கு இவ்வளவு டிஆர்பி ரேட்டிங் கிடைக்கவில்லை என்றே கூறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.



அடுத்த செய்தி

டிரெண்டிங்