ஆப்நகரம்

தீவிர ரசிகரின் மகள் திருமணம்: நேரில் சென்று மணமக்களை வாழ்த்திய விஜய் ஆண்டனி!

நடிகர் விஜய் ஆண்டனி தனது தீவிர ரசிகர் ஒருவரின் திருமண விழாவில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 7 Sep 2021, 3:42 pm
இசை அமைப்பாளராக பல்வேறு அதிரடியான வெற்றிபெற்ற ஆல்பங்களின் மூலம், பிரமிக்க வைக்கும் சாதனை படைத்தவர் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் தற்போது நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் தனது ரசிகர் ஒருவரின் பிறந்தநாளில் விஜய் ஆண்டனி கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Samayam Tamil Vijay Antony
Vijay Antony


விஜய் ஆண்டனி நடிக்கும் படங்களின் துவக்க விழா, வெளியீடு உள்ளிட்ட படம் சம்பந்தமான எந்த விழாவாக இருந்தாலும் முதல் ஆளாக பட போஸ்டர் ஒட்டுவது, திரையரங்கத்தின் முகப்பை அலங்கரிப்பது என்று விஜய் ஆண்டனியின் தீவிர ரசிகராக திகழ்ந்தவர் பீர் முகமது. இவருடைய மகள் திருமணம் அண்மையில் சென்னையில் நடைப்பெற்றது.

இந்த விழாவில் நடிகர் விஜய் ஆண்டனி நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார். விழாவில் ஒரு பிரபலமாக இல்லாமல் திருமண வீட்டார் போல் வெகு நேரம் அங்கிருந்து விழாவுக்கு வந்த மற்ற விருந்தினர்கள் அனைவரிடமும் சகஜமாக பேசி விழாவை சிறப்பித்தார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தாஜ்மஹாலில் ரொமான்ஸ் செய்யும் சிவகார்த்திகேயன்: வைரலாகும் புகைப்படங்கள்!
விஜய் ஆண்டனி தற்போது கோடியில் ஒருவன், தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி, பிச்சைக்காரன் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் கமல் போக்ராவின் இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் தயாரிப்பில் டைரக்டர் விஜய் மில்டன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் விஜய் ஆன்டனி.

இந்த படம் ஏற்கனவே விஜய் ஆன்டனி நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற சலீம் படத்தின் தொடர்ச்சியாக உருவாக உள்ளது. த்ரில்லர், ஆக்ஷன் படமாக உருவாக உள்ள இந்தப்படத்திற்கு 'மழை பிடிக்காத மனிதன்' என வித்தியாசமாக டைட்டில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்