ஆப்நகரம்

Thalapathy Vijay: அடுத்தடுத்த பிரச்சனைகளில் சிக்கி வரும் விஜய்: தளபதிக்கு நேரமே சரியில்லை.!

நடிகர் விஜய் போக்குவரத்து விதிகளை மீறியதாக சென்னை டிராபிக் போலீசார் அபராதம் விதித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 23 Nov 2022, 7:24 pm
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் விஜய் நீண்ட வருடங்ளுக்கு பிறகு அண்மையில் பனையூரில் தனது மன்ற நிர்வாகிகளை சந்தித்துப் பேசிய நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்கள் மற்றும் மீடியாவின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் தனது ரசிகர்களுக்கும் பிரியாணி விருந்து அளித்துள்ளார். இந்நிலையில் விஜய்க்கு போக்குவரத்து போலீசார் அபாராதம் விதித்துள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
Samayam Tamil விஜய்
விஜய்


விஜய் தற்போது 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். ’இந்தப்படத்தினை தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. 'வாரிசு' படத்தில் சரத்குமார், பிரபு, ஷாம், ஸ்ரீகாந்த், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் விஜய்யுடன் இணைந்து நடித்து வருகின்றனர். இந்தப்படத்தை அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியீட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், பண்டிகை காலங்களில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து அதிக திரையரங்குகளை ஒதுக்கவேண்டும் என்றும் டப்பிங் படங்களுக்கு மிச்சமிருக்கும் திரையரங்குகளை ஒதுக்கினால் போதும் என்று தெரிவித்தது சர்ச்சைகளை கிளப்பியது.

Vetrimaaran: பிரபல நடிகருடன் வெற்றிமாறன் கூட்டணி அமைத்த படம் டிராப்பா.?: வெளியான பரபரப்பு தகவல்.!

இந்நிலையில் தற்போது விஜய்க்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர். பனையூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகர் விஜய் வந்த போது, அவரது காரில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியதால் மோட்டர் வாகன சட்டத்தின் கீழ் அவருக்கு ரூ.500 அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Bigg Boss 6: முதல்ல அவரை ரெட் கார்டு கொடுத்து வெளிய அனுப்புங்க: அமுதவாணன் செயலால் கொதிக்கும் ரசிகர்கள்.!

ஏற்கனவே பனையூர் சந்திப்பில் விஜய் ரசிகர் மன்றத்தின் மாநில நிர்வாகியான பூஸ்ஸி ஆனந்தின் காலில் ரசிகர்கள் விழுந்தது இணையத்தில் சர்ச்சைகளை கிளப்பியது. மேலும் 'வாரிசு' படப்பிடிப்பில் அனுமதியில்லாமல் யானைகள் பயன்படுத்தியது தொடர்பாகவும் பிரச்சனைகள் எழுந்தது. இந்நிலையில் போக்குவரத்து போலீசார் விஜய்க்கு அபாரதம் விதித்துள்ளதால், விஜய் அடுத்தடுத்த பிரச்சனைகளில் சிக்கி வருவதாக ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்