ஆப்நகரம்

அட்லி படத்துக்கு 120 நாள் கால்ஷீட் கொடுத்த இளையதளபதி விஜய்!

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துவரும் புதிய படத்திற்காக, 120 நாட்கள் கால்ஷீட்டை ஒதுக்கிக் கொடுத்துள்ளாராம்.

TNN 10 Mar 2017, 5:34 pm
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துவரும் புதிய படத்திற்காக, 120 நாட்கள் கால்ஷீட்டை ஒதுக்கிக் கொடுத்துள்ளாராம்.
Samayam Tamil actor vijay has given 3 months call sheet for atlee directed new film
அட்லி படத்துக்கு 120 நாள் கால்ஷீட் கொடுத்த இளையதளபதி விஜய்!


தெறி படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து, அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 61-வது படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கிறார் விஜய். அதனால் இந்த படத்திற்காக ரஜினி நடித்த ‘மூன்று முகம்’ டைட்டிலை கேட்டு வருவதாக பேச்சு அடிபடுகிறது.

மேலும், இந்த படத்தில் விஜய் முழுவீச்சில் இறங்கி நடித்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமைகளில் கூட ஓய்வெடுக்காமல் படப்பிடிப்பு கலந்து கொண்டு நடித்து வருகிறார்.

இந்த படத்திற்காக விஜய் 120 நாட்கள் மொத்த கால்சீட்டாகக் கொடுத்துள்ளார். அதனால் ஒருநாளைக்கூட வீணடிக்காமல் படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருக்கிறார் அட்லி. அதோடு, முன்பெல்லாம் தான் நடித்த காட்சிகளை ஒவ்வொரு ஷாட்டிலும் நடித்து முடித்ததும் பார்க்கும் விஜய், அதில் ஏதேனும் குறைகள் இருந்தால் அந்த ஷாட்டில் மீண்டும் நடிக்க முடிவெடுக்கிறார். அதுமட்டுமின்றி, அடுத்தநாள் நடிக்க வேண்டிய காட்சியில் எப்படி நடிக்கலாம் என்பதை அட்லி மற்றும் கேமராமேனுடன் டிஸ்கஸ் பண்ணிவிட்டு பின்பு வீட்டிற்குச் செல்கிறாராம் விஜய்.

Actor Vijay has given 3 months working call sheet for Atlee directed new film.

அடுத்த செய்தி

டிரெண்டிங்