ஆப்நகரம்

தளபதியின் 62வது படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடக்கம்!

தளபதி விஜய்யின் 62வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று எளியமுறையில் தொடங்கியுள்ளது.

Samayam Tamil 19 Jan 2018, 11:18 am
தளபதி விஜய்யின் 62வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று எளியமுறையில் தொடங்கியுள்ளது.
Samayam Tamil actor vijay next film shoot started today
தளபதியின் 62வது படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடக்கம்!


‘மெர்சல்’ படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி விஜய்யின் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது. இதனைத் தொடர்ந்து ரசிகர்களை மகிழ்ச்சியூட்டும் விதமாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் தளபதி விஜய் நடிக்கும் 62வது படத்தின் பூஜை இன்று எளியமுறையில் தொடங்கியது. பைரவா படத்தைத் தொடர்ந்து இந்த படத்திலும் கீர்த்தி சுரேஷ் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹமான் இசையமைக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது.

படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் #தளபதி 62 என்ற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் டிரெண்ட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்