ஆப்நகரம்

தமிழ்நாட்டின் முதலமைச்சருடன் விஜய் சேதுபதி சந்திப்பு: கொரோனா நிவாரண நிதி வழங்கினார்!

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கொரோனா நிவாரண நிதாக 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

Samayam Tamil 15 Jun 2021, 12:26 pm
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தற்போது குறைய துவங்கியுள்ளது. இந்த கொரோனா இரண்டாம் அலையால் தமிழகம் ஏகப்பட்ட பொருளாதார இழப்புகளை சந்தித்துள்ளது. கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 25 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளார்.
Samayam Tamil Vijay_Sethupathi
Vijay_Sethupathi


அண்மையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கோவிட் தொற்றின் இரண்டாவது அலையால் நமது மாநிலம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இச்சூழலில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கிட வேண்டுமென்று உங்கள் அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

இப்பேரிடர் காலத்தில் தாங்கள் ஒவ்வொருவரும் அளிக்கக்கூடிய நன்கொடைகள் அனைத்தும், ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் சேமிப்பு நிலையங்கள் அமைத்தல், ஆக்சிஜன் வசதிகளுடன்கூடிய படுக்கைகளை அமைத்தல், ஆக்சிஜன் செரிவூட்டும் இயந்திரங்கள், ஆர்.டி.பி.சி.ஆர். கிட்டுகள், உயிர்காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் பிற மருத்துவக் கருவிகளை வாங்குதல் போன்ற கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு மட்டுமே முழுமையாகப் பயன்படுத்தப்படும் என நான் உறுதி அளிக்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

முதலமைச்சர் குறித்து அவதூறு பரப்பிய போலி ட்விட்டர் கணக்கு: நடிகர் செந்தில் போலீசில் புகார்!
இதனை தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்களும், சினிமா பிரபலங்களும், பொது மக்களும் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற நன்கொடையை வழங்கி வந்தனர்.இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதியும் முதல்வர் நிவாரண நிதிக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

முன்னதாக, நடிகர்கள் சிவகுமார், அவரது மகன்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஒரு கோடி ரூபாயை கொரோனா நிவாரண நிதியாக அளித்தனர். மேலும் நடிகர் ரஜினிகாந்த், அஜித்குமார், சூரி உள்ளிட்ட தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் கொரோனா நிவாரண நிதி அளித்தனர். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி 25 லட்ச ரூபாய்க்கான காசோலையை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்