ஆப்நகரம்

காதலை எதிர்க்கும் வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதி, காதல் சம்பந்தப்பட்ட தெலுங்கு படத்தில் காதலர்களுக்கு வில்லனாக நடிக்கிறார்.

Samayam Tamil 2 May 2019, 3:28 pm

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தமிழில் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். தமிழை அடுத்து மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
Samayam Tamil vijay-sethupathi


இவர் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று எல்லாம் அடம் பிடிப்பது இல்லை. தன்னுடைய ஹீரோ இமேஜ் பார்க்காமல் ‘பேட்ட’ படத்தில் ரஜினிக்கு வில்லனாகவும் நடித்திருந்தார். இந்நிலையில் சிரஞ்சீவி நடிப்பில் தெலுங்கில் உருவாகி வரும் ‘சயீரா நரசிம்ம ரெட்டி‘ படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார்.

விஜய்சேதுபதி படத்தில் நடித்த இயக்குனரின் மகன்!

நடிகர் விஜய்சேதுபதி, தற்போது மேலும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் விஜய் சேதுபதி. இந்தப் படத்தில் இவர் வில்லனாக நடிக்கவுள்ளாராம். நடிகர் சிரஞ்சீவியின் சகோதரி விஜய துர்காவின் மகனும், நடிகர் சாய் தரம் தேஜின் தம்பியுமான வைஷ்ணவ் தேஜ் ஹீரோவாக நடிக்கிறார்.

அயன்மேன் சாவுக்கு விஜய் சேதுபதிதான் காரணம்...! ; தமிழில் அவெஞ்சர்ஸ் பார்த்தவர்கள் டென்ஷன்

இந்தப் படம் காதலை மையப்படுத்தி உருவாகவுள்ளது. இந்தப் படத்தில் காதலுக்கு எதிரியாக நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். இப்படத்தை புச்சி பாபு சனா என்பவ்ர் இயக்கவுள்ளார். இந்தப் படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

விஜய்சேதுபதி தான் பிடிக்கும் - அபூர்வி சைனி ( மிஸ் இந்தியா எலைட் 2019 )

அடுத்த செய்தி

டிரெண்டிங்