ஆப்நகரம்

மகளா நடித்த பொண்ணு கூட ஜோடி சேர முடியாது: விஜய் சேதுபதி திட்டவட்டம்!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தில் கீர்த்தி ஷெட்டியை கதாநாயகியாக நடிக்க வைக்க படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 7 Sep 2021, 6:01 pm
தமிழ் சினிமாவில் பிரபல பிசியான நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதிக்கு சமீபகாலமாக பிற மொழி படங்களில் இருந்தும் வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் தடம் பதித்து வருகிறார். தெலுங்கில் சிரஞ்சீவி நடித்த சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த விஜய் சேதுபதி, அண்மையில் உப்பென்னா தெலுங்கு படத்தில் மிரட்டலான நடிப்பை தந்திருந்தார்.
Samayam Tamil Vijay_Sethupathi
Vijay_Sethupathi


உப்பென்னா வெற்றியை தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு தெலுங்கு சினிமாவில் மார்க்கெட் எகிற துவங்கியுள்ளது. தமிழை போல தெலுங்கிலும் அதிகமான படவாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளன விஜய் சேதுபதிக்கு. இதுதவிர இந்தியில் தி பேமிலி மேன் இயக்குனர்கள் ராஜ்&டிகே இயக்கும் வெப் தொடர் ஒன்றிலும் நடிக்கவுள்ளார் விஜய் சேதுபதி.

இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி, தமிழில் நடிக்க உள்ள புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டியை நடிக்க வைக்க படக்குழு முயற்சி செய்துள்ளனராம். ஆனால் இதை அறிந்த விஜய் சேதுபதி, “அவர் எனக்கு மகளாக நடித்துள்ளார். அவருடன் என்னால் ஜோடியாக நடிக்க முடியாது” என கூறி மறுத்துவிட்டாராம்.

தாஜ்மஹாலில் காதலியுடன் ரொமான்ஸ் செய்த விஜய், அஜித் பட நடிகர்: வைரலாகும் புகைப்படங்கள்!
தெலுங்கில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான உப்பென்னா படத்தில் அவருக்கு மகளாக நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கொடூர வில்லனாகவும் இந்தப்படத்தில் மிரட்டியிருந்தார் விஜய் சேதுபதி. அவரின் நடிப்புக்கு பலரிடமும் பாராட்டுக்கள் கிடைத்தது.

Krithi Shetty


தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள லாபம், துக்ளக் தர்பார், அனபெல் சேதுபதி ஆகிய படங்களின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர கடைசி விவசாயி, மாமனிதன் ஆகிய படங்களும் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் கதை படத்தில் விஜய் சேதுபதி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்