ஆப்நகரம்

மெர்சல் மாபெரும் வெற்றிக்கு நெஞ்சார்ந்த நன்றி: மனம் திறந்த நடிகர் விஜய்!

மெர்சல் படத்தின் வெற்றிக்கு, நடிகர் விஜய் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

TNN 25 Oct 2017, 4:15 pm
சென்னை: மெர்சல் படத்தின் வெற்றிக்கு, நடிகர் விஜய் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil actor vijay thanks to all for mersal victory
மெர்சல் மாபெரும் வெற்றிக்கு நெஞ்சார்ந்த நன்றி: மனம் திறந்த நடிகர் விஜய்!


அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் ’மெர்சல்’. இப்படத்தில் ஜி.எஸ்.டிக்கு எதிரான வசனங்கள் இடம்பெற்றிருந்தன. இதனால் பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுதொடர்பான வசனங்களை நீக்குமாறு, தொடர்ந்து வலியுறுத்தினர்.

மீண்டும் மறு தணிக்கை, படத்திற்கு இடைக்கால தடை, வசனங்கள் நீக்கம் என கோரிக்கைகள் நீண்டு கொண்டே சென்றன. இதற்கிடையில் படத்திற்கு பெரும் ஆதரவு அளித்து, மக்கள் வெற்றியடையச் செய்துள்ளனர். இதற்கு நன்றி தெரிவித்து, நடிகர் விஜய் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் தீபாவளி விருந்தாக வந்த மெர்சல் படத்திற்கு கடும் எதிர்ப்பு வந்தன. அந்த சூழலில் படத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அனைத்து தரப்பினருக்கும் மனமார்ந்த நன்றி என தெரிவித்துள்ளார்.

Actor Vijay thanks to all for Mersal victory.

அடுத்த செய்தி

டிரெண்டிங்