ஆப்நகரம்

வீட்டு பூஜையறையில் சாமியோடு சாமியாக இருக்கும் தளபதி விஜய்: வச்சு செய்யும் ரசிகர்கள்!

தளபதி விஜய்யின் புகைப்படம் வீட்டு பூஜையறையில் இருப்பதைக் கண்ட பலரும் தாறுமாறாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Samayam Tamil 1 Jul 2019, 6:22 pm
ரசிகர்களால் தளபதி என்று செல்லமாக அழைக்கப்படுபவர் விஜய். தமிழ் சினிமாவில் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகர்களில் விஜய்யும் ஒருவர். 61 படங்களில் நடித்துள்ள இவர், தனது 62ஆவது படமான பிகில் என்ற படத்தில் நடித்துள்ளார். வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படம் திரைக்கு வருகிறது. நடிப்பதைத் தொடர்ந்து பின்னணிப் பாடகராகவும் இருக்கிறார். இவருக்கு அனைத்து வயதிலும் ரசிகர்கள் இருக்கிறாகள். ஆல் ஏரியாவிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவரது பிறந்தநாளோ, படமோ வந்துவிட்டால் போதும், ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். எப்போதும் எதிர்மறையை புறக்கணிக்க வேண்டும் என்று தன் ரசிகர்களுக்கு வலியுறுத்துவார்.
Samayam Tamil Vijay.


இது ஒருபுறம் இருக்க, இதையும் மிஞ்சும் அளவிற்கு விஜய்யை கடவுளாக பாவிப்பதும் நடந்து வருகிறது. ஆம், வீட்டின் பூஜை அறையில் விஜய் புகைப்படத்தை வைத்து பலரும் தங்களது இஸ்ட தெய்வமாக விஜய்யை வணங்கி வருகின்றனர். ரசிகர் ஒருவரது தனது வீட்டு பூஜையறையில், விஜய் புகைப்படத்தை வீட்டு பூஜையறையில் வைத்து வணங்கி வரும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை டிரோல் செய்யும் விதமாக, பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இறந்தவர்களின் புகைப்படத்தைத் தான் வீட்டு பூஜையறையில் வைப்பார்கள். அவர்களை சாமியாக நினைத்து வழிபடுவார்கள். அப்படியிருக்கும் போது ஏன் டா விஜய் படத்தை வைத்து இப்படி பண்ணுறீங்க… நானும் விஜய்யின் தீவிர ரசிகர் தான் டா என்று பலரும் குறிப்பிட்டு வருகின்றனர். இன்னும், சிலர் அம்மா – அப்பா தான் கடவுள். அவர்களை வணங்கு. விஜய்க்கு வெறும் ரசிகனாக மட்டும் இரு என்று குறிப்பிடுகின்றனர். விஜய்யை கடவுளாக நினைப்பது ஒன்றும் தவறில்லை. ஆனால், சாமி போட்டோ கூட வைக்க வேணாம். இதால கூட தப்பு இருக்கலாம்.






அடுத்த செய்தி

டிரெண்டிங்