ஆப்நகரம்

தளபதி63 படத்தின் டைட்டில் அசால்ட்? டுவிட்டரில் வைரலாகும் புகைப்படம்!

விஜய் – அட்லி கூட்டணியில் உருவாகி வரும் தளபதி63 படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகவுள்ள நிலையில் படத்தின் தலைப்பு இது தான் என்பதை கூறும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 21 Jun 2019, 5:08 pm
தெறி, மெர்சல் படத்தைத் தொடர்ந்து 3ஆவது ஹிட் கொடுக்க இணைந்த கூட்டணி அட்லி – விஜய். இந்த கூட்டணியில் இன்னும் டைட்டில் வைக்கப்படாத தளபதி63 என்ற படம் உருவாகி வருகிறது. கால்பந்து விளையாட்டை மையப்படுத்திய இப்படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடித்து வருகிறார் என்று தொடர்ந்து செய்தி வெளியாகி வருகிறது. அதோடு, இப்படத்தில் அப்பா மற்றும் மகன் என்று இரு கதாபாத்திரங்களில் விஜய் நடித்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.
Samayam Tamil assault


அதே போன்று வில்லு படத்தைத் தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் நயன்தாராவின் கதாபாத்திரத்தின் பெயர் ஏஞ்சல் என்று கூறப்படுகிறது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாளை தளபதி விஜய் தனது 46ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இதனை சிறப்பிக்கும் வகையில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி63 படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் தயாரிப்பு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதோடு, இன்று நள்ளிரவு அதாவது 22ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு இப்படத்தின் இரண்டாவது லுக் போஸ்டரும் வெளியாக இருக்கிறது.

இதற்கிடையில், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தளபதி63 படத்தின் தலைப்பிற்கு அசால்ட் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு போஸ்டர் வைரலாகி வருகிறது. ஆனால், இந்த தலைப்பு தான் தளபதி63 படத்திற்கு வைக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாக எந்த முறையான அறிவிப்பும் வெளியாகவில்லை.

எனினும், விஜய் ரசிகர்களிடையே பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது. இதற்கிடையில், நாளை விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இன்றே #HBDEminentVijay என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் டிரெண்டாகியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்