ஆப்நகரம்

சைக்காலாஜி ஆசிரியராக பணியாற்றி வரும் விக்ரமின் மனைவி சைலஜா!

நடிகர் விக்ரமின் மனைவி சைலஜா, ஒரு பிரபல பள்ளியில் சைக்காலஜி ஆசிரியராக பணியாற்றி வருகிறாராம்.

TNN 24 Jan 2018, 12:58 pm
நடிகர் விக்ரமின் மனைவி சைலஜா, ஒரு பிரபல பள்ளியில் சைக்காலஜி ஆசிரியராக பணியாற்றி வருகிறாராம்.
Samayam Tamil actor vikram wife shailaja working as a psychology professor
சைக்காலாஜி ஆசிரியராக பணியாற்றி வரும் விக்ரமின் மனைவி சைலஜா!


தன்னுடைய வித்தியாசமான நடிப்பால் அதிக ரசிகர்கள் வட்டத்தைக் கொண்டவர் நடிகர் விக்ரம். தற்போது நடிகர் விக்ரம் கௌதம் மேனன் இயக்கத்தில் ‘துருவ நட்சத்திரம்’ படத்திலும், ஹரி இயக்கத்தில், ‘சாமி 2’ படத்திலும் நடித்து வருகிறார். இவருடைய மகன் துருவ் ‘வர்மா’ என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி நடித்து வருகிறார்.

இந்த நிலையில் விக்ரம் மனைவி சைலஜா குறித்து சின்ன தகவல் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. விக்ரமின் மனைவி சைலஜா அடிப்படையில் ஒரு சைக்காலஜி நிபுணர். போதைப் பழக்கம் கொண்ட பலருக்கு கவுன்சிலிங் மூலம் மறுவாழ்வு கொடுத்து வருகிறார். தற்போது சைலஜா சென்னையில் உள்ள ஒரு பிரபல பள்ளியில் சைக்காலஜி ஆசிரியராக பணியாற்றி வருகிறாராம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்