ஆப்நகரம்

இவர் தான் பிரபல நடிகரின் மனைவியாம்

நடிகர் விக்ராந்தின் மனைவி மானஷா திருமணமாவதற்கு முன் சீரியல்களில் நடித்துள்ளாராம்.

Samayam Tamil 11 Jan 2018, 6:10 pm
நடிகர் விக்ராந்தின் மனைவி மானஷா திருமணமாவதற்கு முன் சீரியல்களில் நடித்துள்ளாராம்.
Samayam Tamil actor vikranth wife manasa biography
இவர் தான் பிரபல நடிகரின் மனைவியாம்


இளம் நடிகர்களில் பலர் தற்போது தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடிக்க மிகவும் போராடி வருகின்றனர். அப்படி போராடி வருபவர்களில் நடிகர் விக்ராந்த்தும் ஒருவர். இவர் விஜய்யின் சித்தியின் மகன். நடிகர் விக்ராந்த் தனது அண்ணன் விஜய்யின் செல்வாக்கைப் பயன்படுத்தாமல் தன் முயற்சியிலேயே நடித்து வருகிறார்.

தற்போது விக்ராந்தின் மனைவி மானஷா பற்றி நிறைய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது மானஷா, பிரபல தொலைக்காட்சியில் ‘உதிரி பூக்கள்’ சீரியலில் நடித்துள்ளாராம். மேலும் மலையாளத்தில் ‘மக்களுடே அம்மே’ உட்பட பல சீரியல்களில் நடித்துள்ளாராம். நடிகை மானஷா மலையாள சினிமா பிரபல நடிகை கணக்காதுர்காவின் மகளாவார். இதுவரை விக்ராந்தின் மனைவி மானஷா, சீரியலில் நடித்தார் என்ற உண்மை யாருக்கும் தெரியாதாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்