ஆப்நகரம்

அரசுப் பேருந்தில் ஓடிய “பேட்ட” படம்; வீடியோ வெளியானதால் அதிர்ச்சி - விஷால் புகார்!

சென்னை: பேட்ட திரைப்படம் ஒளிபரப்பிய அரசுப் பேருந்து ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விஷால் புகார் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 20 Jan 2019, 12:03 am
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் “பேட்ட”. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் திரிஷா, சிம்ரன், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதீன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
Samayam Tamil Petta


நீண்ட நாட்களுக்கு பிறகு, ரஜினியின் மாஸ் நடிப்பில் வெளிவந்துள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் ”பேட்ட” நல்ல வசூலை ஈட்டி வருகிறது. இந்நிலையில் கரூரில் இருந்து சென்னை சென்ற அரசுப் பேருந்தில் “பேட்ட” படத்தை திருட்டுத்தனமாக ஒளிபரப்பி உள்ளனர்.

இதனை ரசிகர் ஒருவர் படம்பிடித்து, பேருந்து எண், வழித்தடம் ஆகியவற்றுடன் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இது ரஜினியின் ரசிகர்கள் பக்கத்திலும் இடம்பெற்றுள்ளது.

இதனை ரீ-டுவீட் செய்த நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவருமான விஷால் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்தப் பதிவை முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோரை டேக் செய்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்