ஆப்நகரம்

”படத்தை வெளியிடுவதற்காக என் அப்பா பிச்சை எடுத்தார்”-நடிகர் விஷால் உருக்கம்..!

”தான் தயாரித்த படத்தை குறித்த நேரத்தில் வெளியிடுவதற்காக ஒரு லேபில் வாசலில் நின்று என் அப்பா பிச்சை எடுத்தார் ”என நடிகர் விஷால் உருக்கமான பேசியுள்ளார்.

Samayam Tamil 7 Mar 2017, 9:36 pm
”தான் தயாரித்த படத்தை குறித்த நேரத்தில் வெளியிடுவதற்காக ஒரு லேபில் வாசலில் நின்று என் அப்பா பிச்சை எடுத்தார் ”என நடிகர் விஷால் உருக்கமான பேசியுள்ளார்.
Samayam Tamil actor vishal reveals why he contest in producers council election
”படத்தை வெளியிடுவதற்காக என் அப்பா பிச்சை எடுத்தார்”-நடிகர் விஷால் உருக்கம்..!


நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நடிகர் விஷால்,தற்போது தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் போட்டியிட தயாராகிவிட்டார்.நடிகர் சங்க தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல்,தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டுவது ஏன்? என பல திரைப்பிரபலங்கள் விஷால் மீது கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதற்கெல்லாம் பதில் சொல்வது போல சமீபத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசியுள்ளார் விஷால்.இதில் தயாரிப்பாளரான தனது தந்தை ஒரு படத்தை வெளியிட எவ்வளவு சிரமப்பட்டார் என்பதையும் உருக்கமாக விஷால் குறிப்பிட்டுள்ளார்.

“நாங்கள் இந்த தேர்தலில் போட்டியிடுவது நல்லது செய்வதற்காகத்தான்.குறிப்பாக தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு செய்யும் நல்லது,தமிழ் சினிமாவின் அனைத்து துறைகளுக்கும் சென்று சேரும்.எனவேதான் தான் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட முடிவு செய்தேன்.இதற்கு முக்கியமான காரணமாக இருந்தது என்னுடைய தந்தை வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் தான்.

என் அப்பா மகாபிரபு போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்தவர்.அவர் ஐ லவ் இந்தியா என்ற படத்தை தயாரித்திருந்தார்.ஆனால் பல பிரச்சனைகளால் அந்த படத்தை குறிப்பிட்ட நாளில் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது.சொன்ன நேரத்தில் படத்தை வெளியிட வேண்டும் என்பதற்காக,ஒரு லேபில் நின்று இந்த படத்தை வெளியிட உதவுங்கள் என என் அப்பா பிச்சை எடுக்காத குறையாக கெஞ்சிக் கொண்டிருந்தார்.இதனை நான் என் கண்ணால் பார்த்திருக்கிறேன்.

என் அப்பாவுக்கு வந்த அந்த நிலைமை வேறு எந்த தயாரிப்பாளருக்கும் வந்துவிடக் கூடாது என்பதற்காக கூட,நான் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட நினைத்திருக்கலாம்.”என உருக்கமாக பேசினார் நடிகர் விஷால்.

Actor Vishal reveals why he contest in Producers council election

அடுத்த செய்தி

டிரெண்டிங்