ஆப்நகரம்

க்யூபுக்கு பதில் ஏரோக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த விஷால்!

க்யூபுக்குப் பதிலாக ஏரோக்ஸ் என்ற நிறுவனத்துடன் தயாரிப்பாளர் சங்கம் ஒப்பந்தம் செய்துள்ளது.

Samayam Tamil 10 Apr 2018, 4:34 pm
க்யூபுக்குப் பதிலாக ஏரோக்ஸ் என்ற நிறுவனத்துடன் தயாரிப்பாளர் சங்கம் ஒப்பந்தம் செய்துள்ளது.
Samayam Tamil vishal.


தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கம், க்யூப், யு.எப்.ஓ. போன்ற டிஜிட்டல் நிறுவனங்களின் கட்டணம் அதிகமாக இருப்பதாகக் கூறி, கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகிறது. இதனால், புதிய படங்கள் எதுவும் ரிலீஸாகவில்லை. ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்தப் போராட்டம் எப்போது முடியும் எனவும் தெரியவில்லை.

இந்நிலையில், அதிக கட்டணம் வசூலிக்கும் க்யூப், யு.எப்.ஓ.வுக்கு பதிலாக ஏரோக்ஸ் என்ற நிறுவனத்துடன் தயாரிப்பாளர்கள் சங்கம் நேற்று ஒப்பந்தம் போட்டுள்ளது. டிசிஐ அப்ரூவல் பெற்ற இந்த நிறுவனம், மற்ற டிஜிட்டல் நிறுவனங்களைவிட 50% குறைவாக கட்டணம் வாங்கிறார்களாம். சிறிய படங்களின் தயாரிப்பாளர்களுக்கு இது மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்கிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்