ஆப்நகரம்

விஷால் வீட்டில் திருமணம்

விஷாலின் தங்கை ஐஸ்வர்யாவுக்கும், பிரபல உம்மிடி நகைக்கடை குடும்பத்தைச் சேர்ந்த உம்மிடி கிருத்திஷுக்கும் அடுத்த ஆண்டு திருமணம் செய்வதாக பேசி முடிவு செய்யப்பட்டுள்ளது.

TNN 18 Aug 2017, 11:12 am
தமிழ் திரைப்பட நடிகர் சங்கத்தலைவரான விஷாலுக்கு, விக்ரம் கிருஷ்ணா என்ற அண்ணனும், ஐஸ்வர்யா என்ற தங்கையும் உள்ளனர். இவரது அண்ணன் திமிறு படத்தில் வில்லியாக நடித்த ஸ்ரேயா ரெட்டியை கடந்த 2008 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.
Samayam Tamil actor vishal sister marriage
விஷால் வீட்டில் திருமணம்


இந்த நிலையில் விஷாலின் கல்யாணத்தை எதிபார்த்திருந்த ரசிகர்களுக்கு அவரது தங்கையின் திருமண செய்தி கிடைத்துள்ளது. . ஐஸ்வர்யா சிங்கப்பூரில் M.B.A படித்துவிட்டு தற்போது விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தை கவனித்து வந்தார். இந்த நிலையில் ஐஸ்வர்யாவுக்கும், பிரபல உம்மிடி நகைக்கடை குடும்பத்தைச் சேர்ந்த உம்மிடி கிருத்திஷுக்கும் அடுத்த ஆண்டு திருமணம் செய்வதாக பேசி முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி ஐஸ்வர்யா-கிருத்தீஷ் திருமணம் வரும் 27-ம் தேதி சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள மேயர் ராமநாதன் ஹாலில் நடைபெற உள்ளது. திருமண அழைப்பிதழை கொடுக்க செல்லும் இடங்களில் எல்லாம் விஷாலின் கல்யாணத்தை பற்றியே விசாரிக்கின்றனர். ஆனால், நடிகர் சங்க கட்டிடம் திறந்த பிறகுதான் தனது கல்யாணம் என்பதில் விஷால் உறிதியாக இருகிறார்.

Actor vishal sister marriage

அடுத்த செய்தி

டிரெண்டிங்