ஆப்நகரம்

விழாக்களைச் சிறப்பிக்கும் விஷால்! வாரி வழங்கும் வாக்குறுதிகள்!

சினிமா சம்பந்தப்பட்ட எந்த விழாவாக இருந்தாலும் நடிகர் விஷால் தானாக முன்வந்து கலந்து கொள்கிறார்.

TNN 14 Mar 2017, 6:50 pm
சினிமா சம்பந்தப்பட்ட எந்த விழாவாக இருந்தாலும் நடிகர் விஷால் தானாக முன்வந்து கலந்து கொள்கிறார்.
Samayam Tamil actor vishals voluntary participation in kollywood functions
விழாக்களைச் சிறப்பிக்கும் விஷால்! வாரி வழங்கும் வாக்குறுதிகள்!


நடிகர் விஷால், நடிகர் சங்கத்தேர்தல் போட்டியின்போது, நடிகர்களுக்கு நல்லது செய்வேன், நடிகர் சங்கம் கட்டுவேன் என்பது உள்ளிட்ட பல வாக்குறுதிகளை வாரி வழங்கினார். அதனால்தான் விஷால் அணி வெற்றி பெற்றது. ஆனால் அப்போது கூறிய ஓரிரு விசயங்கள் தவிர இன்னும் எந்த முக்கிய முடிவுகளையும் அவர்கள் எடுக்கவில்லை என்பதுதான் நடிகர் நடிகைகளின் கருத்தாக உள்ளது.

முக்கியமாக, நடிகர் சங்கம் கட்ட இன்னும் ஒரு தூண் கூட எழுப்பவில்லை. இருந்தும் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டோம் என்று விஷால் கூறி வருவதையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இந்நிலையில், தற்போது தயாரிப்பாளர் சங்கத் தேர்தலிலும் தலைவர் பதவிக்கு போட்டியிடும் விஷால், கோடம்பாக்கத்தில் நடக்கும் அனைத்து சினிமா பட நிகழ்ச்சி மற்றும் ஆடியோ விழாக்களிலும் தவறாமல் கலந்து கொண்டு வருகிறார்.

இந்த திடீர் மாற்றம் குறித்து கேட்பவர்களிடத்தில், தான் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் பதவியில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் இப்படித்தான் இருப்பேன். நான் சம்பந்தப்படாத படமாக இருந்தாலும் அதை விளம்பரப்படுத்துவதை எனது நோக்கமாக கருதுவேன் என்கிறார் விஷால்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்