ஆப்நகரம்

முண்டாசுப்பட்டில சொன்ன காமெடி இப்ப நடக்குது ; விஷ்ணு விஷால் ஃபன்னி ட்வீட்

முண்டாசுப்பட்டி படத்தில் சொன்னது தற்போது இந்தியாவில் இதுதான் நடந்துகொண்டிருக்கிறது என்கிறார் விஷ்ணு விஷால்

Samayam Tamil 6 Apr 2020, 10:11 am
கொரோனா அச்சம் காரணமாக உலகமே பாதுகாப்பாக இருக்கவேண்டிய விசயங்களைக் குறித்து சிந்திக்கும்போது, இந்தியா மட்டும் ஏன் இப்படி இருக்கிறது என நம்மில் பலர் கவலைப் பட்டிருக்க கூடும். இதுபோலத்தான் தனது கவலையை ஜாலியான மீம் கொண்டு தெரிவித்திருக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால்.
Samayam Tamil mundasupatti comedy


கொரோனா பற்றி விஷ்ணு விஷால் பகிர்ந்த காமெடி மீம் இதோ



கொரோனா கோ (corona go)

அது என்னங்க எல்லாரும் ஸ்டேட்டஸ்ல கொரோனா கோ னு போட்ருக்கீங்க

அப்டி போட்டா கொரோனா அத படிச்சி பாத்துட்டு போய்டும்

இந்த மீமை பகிர்ந்து அதில் காளிவெங்கட் மற்றும் இயக்குநர் ராம்குமார் ஆகியோரை டேக் செய்துள்ளார் விஷ்ணு.

உலகின் பல நாடுகளில் கொரோனா மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. தினம் தினம் அதிக அளவில் மக்கள் இறந்துகொண்டிருக்கிறார்கள். இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காவல்துறை, மருத்துவத் துறையுடன் இணைந்து அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிரபலங்களும் தங்கள் பங்குக்கு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இருந்த போதிலும், சிலர் கொரோனாவை பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமல், வெளியில் நடமாடுவது, வாகனங்களில் ஊர் சுற்றுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சிலர் வாட்ஸாப் ஸ்டேட்டஸ்களில் கொரோனாவை விரட்டி வருகின்றனர். அதை வைத்து மீம் கிரியேட்டர்கள் சமூக வலைதளங்களில் ஃபன்னியாக மீம் செய்து பகிர்ந்து வருகின்றனர். அதில் ஒன்றுதான் விஷ்ணு விஷால் பகிர்ந்த மீம். முண்டாசுப் பட்டி படத்தில் வரும் காட்சியை வைத்து இந்த மீம் தயார் செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்