ஆப்நகரம்

Vivek: விவேக் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதி: ரசிகர்கள் அதிர்ச்சி

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டு சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Samayam Tamil 16 Apr 2021, 2:33 pm

ஹைலைட்ஸ்:

  • விவேக் மருத்துவமனையில் அனுமதி
  • விவேக்கிற்கு மாரடைப்பு
  • நேற்று கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டார் விவேக்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil vivek
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நேரத்தில் விவேக் நேற்று தடுப்பூசி போட்டுக் கொண்டார். மற்றவர்களையும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு வலியுறுத்தினார்.
இந்நிலையில் அவருக்கு இன்று மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் விவேக்கிற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்த ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். அவர் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்வதாக பலரும் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.
நேற்று தானே தடுப்பூசி போட்டேன் என்றார், இன்று இப்படி ஆகிவிட்டதே என்கிறார்கள் ரசிகர்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்