ஆப்நகரம்

Thalapathy 63: சத்தியமாக நடிக்கிறேன்: உண்மையைச் சொன்ன காமெடி நடிகர் விவேக்!

சர்கார் படத்தைத் தொடர்ந்து தளபதி விஜய் இயக்குனர் அட்லியுடன் 3வது முறையாக இணைந்து தனது 63ஆவது படத்தில் நடிக்கிறார்.

Samayam Tamil 6 Dec 2018, 5:22 pm
சர்கார் படத்தைத் தொடர்ந்து தளபதி விஜய் இயக்குனர் அட்லியுடன் 3வது முறையாக இணைந்து தனது 63ஆவது படத்தில் நடிக்கிறார்.
Samayam Tamil pathy


இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த 6ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற படம் சர்கார். அரசியல் பின்னணிக் கதையை மையப்படுத்திய இப்படம் அரசியல் கட்சியினருரிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. எனினும், வசூல் ரீதியாக இப்படம் ரூ.200 கோடி வரை வசூல் குவித்துள்ளது.

இந்த நிலையில், இப்படத்தைத் தொடர்ந்து தனது 63ஆவது படத்திற்காக தளபதி விஜய் தெறி படத்தின் இயக்குனர் அட்லியுடன் 3ஆவது முறையாக இணைந்துள்ளார். இந்தக் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தை ஏஜிஎஸ் புரோடக்‌ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 14ம் தேதி மைலாப்பூரில் உள்ள ஒரு கோயிலில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக மெர்சல் மற்றும் சர்கார் ஆகிய படங்களுக்கு இசையமைத்திருந்தார்.

இந்த நிலையில், அட்லி – தளபதி விஜய் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் தலைப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே இந்த கூட்டணியில் வந்த மெர்சல் படத்தில் இடம் பெற்றிருந்த பாடல் ஆளப்போறான் தமிழன். உலகம் முழுவதும் வைரலான இந்தப் பாடல் வரியைக் கொண்டு தற்போது தலைப்பு வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தில் விஜய் உடன் இணைந்து மாஸ் காமெடி நடிகர் விவேக்கும் நடிக்கிறார் என்று தகவல் வெளியானது.

இதையடுத்து, இது குறித்து விவேக் கூறுகையில் சத்தியமாக நடிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம், 10 ஆண்டுகளுக்குப் பிற்கு விஜய் உடன் இணைந்து நடிக்கும் இந்தப் படம் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்