ஆப்நகரம்

யோகி பாபுவுக்கு ஒருநாள் சம்பளம் இத்தனை லட்சமா?

தற்போதைய தமிழ் சினிமாவில் உச்சபட்ச காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு நாள் ஒன்றுக்கு ரூ.5 லட்சம் வரை சம்பளம் பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Samayam Tamil 2 May 2019, 10:59 pm
தற்போதைய தமிழ் சினிமாவில் உச்சபட்ச காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு நாள் ஒன்றுக்கு ரூ.5 லட்சம் வரை சம்பளம் பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Samayam Tamil Yogi Babu


தமிழ் சினிமாவில் தற்போது காமெடியில் உச்சத்தில் உள்ள நடிகா் யோகி பாபு. அவரது உடல் அமைப்பும், அவரது டைமிங்கும் ரசிகா்களை மிகவும் ஈா்த்துள்ளது. அவா் திரையில் வந்தாலே போதும் காமெடிக்கு கேரண்டி என்ற நிலை உருவாகிவிட்டது.

இதனால் பெருவாரியான படங்களில் அவரை புக் செய்துவிடுகிறார்கள். கால்ஷீட் விசயத்தில் அவர் மிக பிசியாக இருக்கிறார். கடந்த வருடம் மட்டும் 20 படங்களில் நடித்துள்ளார். இதில் சர்கார், கோலமாவு கோகிலா, பரியேறும் பெருமாள் ஆகிய படங்கள் அவருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைந்தன.

அதே போன்று இந்த வருடம் தற்போது வரை அவருக்கு 19 படங்கள் வரை உள்ளதாம். தற்போது அவர் தர்ம பிரபு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான நடிகராக வலம் வரும் யோகி பாபு தற்போது சம்பளத்தை ஒரு நாளுக்கு ரூ 5 லட்சம் என உயர்த்திவிட்டாராம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்