ஆப்நகரம்

கொரோனாவை வெல்வோம், மக்களை காப்போம்: பொது மக்களுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் அட்வைஸ்!

கொரோனா இரண்டாவது அலை தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

Samayam Tamil 31 May 2021, 5:44 pm
தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு காரணமாக கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் சற்று குறையத் துவங்கியுள்ளது. இதனால் தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை நீட்டித்துள்ளது தமிழக அரசு. இதனிடையில் மக்களுக்கு அதிகமான தடுப்பூசிகள் செலுத்தவும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலை குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
Samayam Tamil Aishwarya_Rajesh
Aishwarya_Rajesh


தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்கள் மத்தியில் முகக்கவசம் அணிவது, கையை அடிக்கடி சுத்தம் செய்வது உள்ளிட்ட விஷயங்களை வீடியோவாக வெளியிட்டார். அதனை தொடர்ந்து நடிகர்கள் சத்யராஜ், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் மக்களிடையில் கொரோனா விழிப்புணர்வு அளிக்கும் விதமாக வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கொரோனா விழிப்புணர்வு தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'நம் அனைவருக்குமே தெரியும், நாம் இப்போது கொரோனா இரண்டாவது அலையில் இருக்கிறோம். முதல் அலையை விட, இரண்டாவது அலையில் நிறையப் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். முக்கியமாக ஆஸ்துமா, இதயப் பிரச்சினை இருப்பவர்களை ரொம்பவே பாதித்துள்ளது.

போலி அடையாள அட்டையால் வந்த வினை: கொரோனா தடுப்பூசி சர்ச்சை குறித்து நடிகை விளக்கம்!

Aishwarya_Rajesh

தயவுசெய்து வீட்டிலிருந்து வெளியே வராதீர்கள். முக்கியமான விஷயத்துக்காக வெளியே சென்றால் கூட இரட்டை முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள். அதுமட்டுமன்றி, கைகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். கிருமிநாசினி பயன்படுத்துங்கள்.

மேலும், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், வயதானவர்கள் ரொம்ப எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம். கொரோனாவை வெல்வோம், மக்களைக் காப்போம். நம்மையும் காப்போம், நாட்டையும் காப்போம்' என அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்