ஆப்நகரம்

இரண்டு முறை காதலில் விழுந்த ஐஸ்வர்யா ராஜேஷ்: இப்போ யாரை காதலிக்கிறார் தெரியுமா?

வளர்ந்து வரும் நடிகைகளில் மிகச்சிறந்த நடிகையாக திகழ்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். தன் நடிப்புத் திறமையால் முன்னனி நடிகர்களுடன் நடிக்கும் அளவிற்கு முன்னேறியுள்ளார்.

Samayam Tamil 18 Feb 2019, 1:07 pm

ஹைலைட்ஸ்:

  • இந்தாண்டு மட்டும் 9 படங்களை கைவசம் வைத்துள்ள முன்னனி நடிகையாக ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளார்.
  • தற்போது அவரின் காதலனை குறித்து தகவலை வெளியிட்டுள்ளார்.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Aishwarya-Rajesh 1
வளர்ந்து வரும் நடிகைகளில் மிகச்சிறந்த நடிகையாக திகழ்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். தன் நடிப்புத் திறமையால் முன்னனி நடிகர்களுடன் நடிக்கும் அளவிற்கு முன்னேறியுள்ளார்.
இந்தாண்டு மட்டும் 9 படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். மிக பிஸியான வேலையில் அவர் அளித்த பேட்டியில் அவரின் காதல் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அவர் பேசும் போது, "நான் 11, 12வது படிக்கும் போது ஒரு பையனை காதலித்தேன். அவரின் செய்கையால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டோம்.

பின்னர் கல்லூரியில் படிக்கும் போது ஒருவரை காதலித்தேன். எங்கள் உறவு 5-6 வருடங்கள் நீடித்திருந்தது. ஆனால் இருவரின் கருத்து வேறு வேறாக இருந்ததால் பிரிய வேண்டிய நிலை உருவானது.

தற்போதும் நான் காதலிக்கின்றேன். ஆம் நான் தற்போது சினிமா நடிகையாக உள்ளேன். என் துறையையும், வேலையையும் நேசிக்கின்றேன். வேறு நபரை காதலித்து மீண்டும் மனதில் வலியை சுமக்க விரும்பவில்லை" என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்