ஆப்நகரம்

ராஜமௌலி மீது பயங்கர ஆத்திரம்: ஆலியா பட் செய்த காரியத்தால் பரபரக்கும் திரையுலகம்..!

'ஆர் ஆர் ஆர்' படத்தால் ராஜமெளலி மீது கடும் கோபத்தில் இருக்கும் ஆலியா பட் செய்துள்ள காரியம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 29 Mar 2022, 7:25 pm
ராஜமெளலி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ஆர் ஆர் ஆர்'. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களே நடித்துள்ளனர். டிவிவி நிறுவனம் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக இந்த படத்தைத் தயாரித்துள்ளது.
Samayam Tamil Alia Bhatt - Rajamouli
Alia Bhatt - Rajamouli


தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் இந்தப் படம் கடந்த 25ஆம் தேதி வெளியாகியுள்ளது. 'ஆர் ஆர் ஆர்' படத்திற்கு கீரவாணி இசையமைத்துள்ளார். சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராகி உள்ள இப்படம் உலகம் முழுவதிலும் ஒரே சமயத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

சுதந்திர போராட்ட வீரர்களான சீதாராம ராஜு மற்றும் கொமராம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகி உள்ளது. இப்படத்தில் நடித்துள்ள ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரின் நடிப்பை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். ஆனாலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆலியா பட், 'ஆர் ஆர் ஆர்' படத்தில் வெறும் சில நிமிட காட்சிகளில் மட்டுமே வந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த இடத்துல கூடவா கம்மல் போடுவாங்க..?: வைரலாகும் யாஷிகாவின் வீடியோ..!
ஆலியா பட்டிற்கு தென்னிந்திய திரையுலகில் 'ஆர்ஆர்ஆர்' முதல் படம். ஆனால் படத்தில் அவர் எங்கே என தேடும் அளவிற்கு அவரது கதாபாத்திரம் இருந்தது. இதனை ஆலியா பட்டே எதிர்பார்க்கவில்லையாம். இதனால் ராஜ மெளலி மீது கடும் கோபத்தில் உள்ளாராம் ஆலியா பட்.

இந்நிலையில் ஆலியா பட் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்த ஆர்.ஆர்.ஆர். படம் தொடர்பான அனைத்து பதிவுகளையும் நீக்கியுள்ளார். மேலும், இயக்குநர் ராஜமௌலியை பின்தொடர்பவர்கள் பட்டியலில் இருந்தும் நீக்கியுள்ளார். இந்த சம்பவம் டோலிவுட் மற்றும் பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்