ஆப்நகரம்

இன்ஸ்டாகிராமில் அம்மாவின் புகைப்படத்தை வெளியிட்ட அமலா பால்!

பிரபல நடிகை அமலா பால், தன்னுடைய அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். ‘மைனா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்அறிமுகமானவர் நடிகை அமலாபால்.

Samayam Tamil 10 Mar 2019, 3:54 pm

ஹைலைட்ஸ்:

  • இயக்குனர் ஏ.எல்.விஜய்யுடன் நடந்த முடிந்த திருமணத்திற்கு பிறகு அவர் படங்களில் அதிகமாக நடித்து வருகிறார்.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Amala-Paul
பிரபல நடிகை அமலா பால், தன்னுடைய அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
‘மைனா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்அறிமுகமானவர் நடிகை அமலாபால். அதையடுத்து அவர் தமிழில் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் தமிழ், மலையாளம் என இரு மொழியிலும் பிசியாக நடித்து வருகிறார். அண்மையில் அவர் நடிப்பில் வெளியான படம் ‘ராட்சஸன்’.
இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று ஹிட்டானது. இப்படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யும் முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அதே வேளையில் அவர் நடித்துள்ள ‘ஆடை’ படத்தின் மீது எதிர்பார்ப்பு சூழ்ந்துள்ளது.
இயக்குனர் ஏ.எல்.விஜய்யுடன் நடந்த முடிந்த திருமணத்திற்கு பிறகு அவர் படங்களில் அதிகமாக நடித்து வருகிறார். நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அவர் நேற்று மகளிர் தினம் என்பதாலும், தன் அம்மாவுக்கு பிறந்த நாள் என்பதாலும் வாழ்த்துக்களுடன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்