தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா. முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள அனுஷ்காவிற்கு , பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. இந்நிலையில் அனுஷ்கா கதாநாயகியாக நடிக்கவுள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது..
இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை கூட்டிய நடிகை அனுஷ்கா, அதன்பிறகு உடல் எடையை குறைக்க பெரும் அவதிப்பட்டார். இதனால் அவருக்கு புதிய பட வாய்ப்புகள் எதுவும் பெரிதாக அமையவில்லை. அதன்பின்னர் உடல் எடையை குறைப்பதில் மட்டும் அதிக கவனம் செலுத்தி வந்தார் அனுஷ்கா.
அதனை தொடர்ந்து மாதவனுக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்த 'சைலன்ஸ்' படம் வெளியானது. இதில் காது, கேட்காதா, வாய் பேச முடியாத பெண்ணாக அனுஷ்கா நடித்திருந்தார். சவாலான கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தாலும், இப்படமும் அவருக்கு தோல்வியை தந்தது. அதன்பின்னர் கடந்த ஓராண்டாக பட வாய்ப்புகள் எதுவும் அமையாமல் இருந்தார் அனுஷ்கா.
இந்நிலையில் மீண்டும் தமிழில் புதிய படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளாராம் அனுஷ்கா. ஏ.எல்.விஜய் இயக்கிய தெய்வத்திரு மகள், தாண்டவம் படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த அனுஷ்கா, நீண்ட இடைவெளிக்குப் பின், மூன்றாவது முறையாக விஜய் இயக்கத்தில் அனுஷ்கா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் படப்பிடிப்பு அடுத்தாண்டு ஜனவரி மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.