ஆப்நகரம்

அனுஷ்கா ஷெட்டிக்கு விபத்தா?

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் படப்பிடிப்பின் போது நடிகை அனுஷ்காவிற்கு விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி வருகிறது.

Samayam Tamil 27 Jun 2019, 7:08 pm
அனுஷ்கா ஷெட்டி தென்னிந்திய சினிமாவின் கனவுக்கன்னி. 10 வருடங்களாக தென்னிந்திய சினிமாக்களில் கோலோச்சி வருபவர். தென்னிந்திய முன்னனி ஹீரோக்கள் அனைவருடனும் நடித்த ஹீரோயின். தனி ஹீரோயினாகவும் நடித்து வெற்றி பெற்றவர். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படன் பாகுபலி. இந்திய சினிமாவிலேயே மிகப்பெரும் வசூலைக் குவித்த படம்.
Samayam Tamil anushka


இஞ்சி இடுப்பழகி படத்தில் நடிப்பதற்காக உடல் எடையை கூட்டிய இவர் மிகவும் குண்டாவிட்டதால் தன் உடல் எடையை குறைக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். சமீபத்தில் தான் உடல் எடையை முழுதும் குறைத்து மீண்டும் பழைய நிலையில் போட்டோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த போட்டோவும் பெரிய வைரலானது. தற்போது மாதவன் ஜோடியாக சைலன்ஸ் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படம் மிகப்பிரமாண்டமான முறையில் உருவாகி வருகிறது. நயன்தாரா ஹீரோயினாக நடிக்க சுதீப், விஜய் சேதுபதி முக்கிய பாத்திரங்களில் இப்படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங்கின் போது அனுஷ்காவுக்கு விபத்து ஏற்பட்டதாகவும் காலில் அடிபட்டதகாவும் தகவல் பரவியது. இதனால் சினிமா உலகம் பரபரப்பாகி அனைவரும் அனுஷ்காவை நலம் விசாரிக்கத் தொடங்கி விட்டனர்.

எனக்கு எதுவும் விபத்து நடக்கவில்லை. நான் நலமாக இருக்கிறேன் என தற்போது அனுஷ்கா ஷெட்டி தன் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவருக்கு சிறிய அளவில் விபத்து ஏற்பட்டதாகவும் ஆனால் அவர் நலமுடன் இருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதோடு, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நலமுடன் இருப்பதாக பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram 😘😘 A post shared by Anushka Shetty (@anushkashettyofficial) on Jun 26, 2019 at 11:15pm PDT

அடுத்த செய்தி

டிரெண்டிங்