ஆப்நகரம்

தொடர் தோல்வியை கொடுத்த ஹீரோவுடன் நடிக்க நடிகை மறுப்பு!

தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்த மஞ்சு மனோஜுடன் நடிக்க நடிகை ப்ரக்யா ஜெய்ஸ்வால் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

TOI Contributor 27 Jul 2016, 4:14 pm
தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்த மஞ்சு மனோஜுடன் நடிக்க நடிகை ப்ரக்யா ஜெய்ஸ்வால் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
Samayam Tamil actress denied act with an actor
தொடர் தோல்வியை கொடுத்த ஹீரோவுடன் நடிக்க நடிகை மறுப்பு!


ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகி ப்ரக்யா ஜெய்ஸ்வால் தற்போது நாகார்ஜூனா நடிக்கும் ‘ஓம் நமோ வெங்கடேஷாய’ எனும் பக்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இயக்குனர் சத்யா இயக்கத்தில் நடிகர் மஞ்சு மனோஜ் நாயகனாக நடிக்கும் படத்தில் ப்ரக்யா நாயகியாக ஒப்பந்தமானார். திடீரென அப்படத்திலிருந்து ப்ரக்யா விலகி விட்டார்.

ப்ரக்யா வளர்ந்து வரும் நடிகை என்பதால் தொடர்ந்து தோல்விப்படங்களை கொடுத்த மஞ்சு மனோஜுடன் இணைந்து நடிக்க வேண்டாம் என நாயகிக்கு நெருக்கமானவர்கள் ஆலோசனை கூறியதன் விளைவு தான் ப்ரக்யா இப்படத்திலிருந்து விலகியது என டோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகின்றது.

ஆனால் ப்ரக்யா கால்ஷீட் பிரச்சனை காரணமாக இப்படத்தில் தொடர முடியவில்லை என காரணம் கூறி மஞ்சு மனோஜ் படத்திலிருந்து விலகி விட்டாராம். தற்போது படக்குழு நாயகி தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்