ஆப்நகரம்

Dhanush: தனுஷ் பற்றிய 'அந்த' வதந்தியை கன்பார்ம் பண்ணிய ஸ்வீடன் நடிகை..!

தனுஷின் 'நானே வருவேன்' படம் குறித்த புதிய அப்டேட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஸ்வீடன் நடிகை எல்லி அவ்ரம்.

Samayam Tamil 11 Apr 2022, 9:14 am
கார்த்திக் நரேனின் 'மாறன்' படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் 'திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்து வந்தார் தனுஷ். இந்தப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் துவங்கியது. இதனிடையில் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் 'நானே வருவேன்' படத்திலும் நடித்து வருகிறார் தனுஷ்.
Samayam Tamil Dhanush
Dhanush


இயக்குநர் செல்வராகவன், தனுஷ், யுவன்சங்கர் ராஜா ஆகிய மூவரும் பத்தாண்டுகளுக்கு பிறகு 'நானே வருவேன்' படத்தில் மீண்டும் இணைய உள்ளனர். புதுப்பேட்டை படத்திற்கு பிறகு இவர்கள் மூவரும் இணைய உள்ளதால் இந்தப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார்.

'நானே வருவேன்' படத்தில் இரண்டு விதமான கெட்டப்களில் நடிக்கிறார் தனுஷ். ஒரு கெட்டப்பில் ஸ்டைலிஸ் இளைஞராக இருக்கும் தனுஷ், மற்றொரு கெட்டப்பில் நடுத்தர வயது தோற்றம் கொண்ட கெட்டப்பில் உள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. செல்வராகவனும் இந்தப்படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தலைவர் அவதாரம் எடுக்க போவது எப்போது.?: நெல்சனின் கேள்விக்கு விஜய்யின் 'நச்' பதில்..!
இந்தப்படத்தில் தனுஷ் ஜோடியாக சுவிஸ் நாட்டு நடிகை எல்லி அவ்ரம் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலைய்ல் 'நானே வருவேன்' படக்குழுவினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இந்த தகவலை உறுதி செய்துள்ளார் எல்லி. இது தொடர்பாக தன்னுடைய பதிவில், உங்கள் அனைவருடனும் இதைப் பகிர்ந்து கொள்வதில் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாகவும் உற்சாகமாகவும் உணர்கிறேன்.


இந்தப்படத்தில் எனக்கு இடம்பெற்ற பகுதியை நேற்று எனது அற்புதமான சக நடிகர் தனுஷுடனும், புத்திசாலித்தனமான இயக்குனர் செல்வராகவனுடனம் முடித்துள்ளேன். என்னை இப்படத்தில் இணைத்ததற்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார் எல்லி அவ்ரம். 'நானே வருவேன்' படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்