ஆப்நகரம்

குடுமிச்சண்டை போட்டுக்கொண்ட ஹீரோயின்கள்!

நடிகை ஐஷ்வர்யா ராஜேஷூக்கும், நடிகை ஹைராவுக்கும் படப்பிடிப்பு தளத்தில் சண்டை ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

TOI Contributor 23 May 2017, 4:36 am
நடிகை ஐஷ்வர்யா ராஜேஷூக்கும், நடிகை ஹைராவுக்கும் படப்பிடிப்பு தளத்தில் சண்டை ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil actress haira fight with aishwarya rajesh
குடுமிச்சண்டை போட்டுக்கொண்ட ஹீரோயின்கள்!


தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ். இவர் தற்போது விளம்பரம் எனும் படத்தில் நடித்து வருகிறார். இவருடன் புதுமுக நடிகை ஹைரா என்பவரும் நடித்துவருகிறார். கதைப்படி ஐஷ்வர்யா ராஜேஷ் நடனம் ஆடுவார். அவருக்கு ஹைரா கொலுசு மாட்டிவிட வேண்டும். ஆனால் ஹைரா கொலுசு மாட்டிவிட மறுத்துள்ளார்.

அதற்கு ஐஷ்வர்யா ராஜேஷ், கொலுசை மாட்டிவிடவில்லை என்றால் பரவாயில்லை நாம் காட்சியை மாற்றலாம் என்று ஐடியா கொடுத்துள்ளார். இதில் கோபமடைந்த இயக்குநர் ஹைராவை கண்டுத்துள்ளார். இயக்குநர் கண்டித்த பிறகு ஹைரா கொலுசு மாட்டிவிட்டுள்ளார். இதற்கு காரணம் இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே நடந்த சண்டை தான் காரணம் என்று கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்