ஆப்நகரம்

Hansika Motwani: அதெல்லாம் உண்மையில்லை, வதந்தி: ஹன்சிகாவின் தாயார் விளக்கம்.!

நடிகை ஹன்சிகா மோத்வானி விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக வெளியான செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் அவரின் தாயார்.

Samayam Tamil 6 Aug 2022, 6:56 pm
தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் நடித்து வரும் நடிகை ஹன்சிகாவின் நடிப்பில், கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படமாக 'மஹா' அண்மையில் வெளியானது. ஹன்சிகாவின் 50 ஆவது படமான இதில் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
Samayam Tamil ஹன்சிகா மோத்வானி
ஹன்சிகா மோத்வானி


தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களான விஜய், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பலருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் நடிப்பில் 105 மினிட்ஸ் என்ற படம் உருவாகி ரிலீசுக்காக காத்து கொண்டிருக்கிறது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இவர் நடிப்பில் 50 ஆவது படமாக வெளியான ‘மஹா’ எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஹன்சிகா, நடிகர் சிம்பு இருவரும் காதலித்தனர். ஆனால் இவர்களது காதல் தோல்வியில் முடிந்தது. பிரேக்கப்பிற்கு பிறகு சிம்பு, ஹன்சிகா இருவரும் ‘மஹா’ படத்தில் இணைந்து நடித்தனர். இந்நிலையில் ஹன்சிகா விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக இணையத்தில் வதந்திகள் பரவியது.

The Legend: ‘தி லெஜண்ட்’ படத்தின் ஒரு வார வசூல் இவ்வளவா.?: மாஸ் காட்டும் அண்ணாச்சி.!

இதுகுறித்து தற்போது விளக்கமளித்துள் அவரின் தாயார், ஹன்சிகா திருமணம் தொடர்பாக வெளியான அனைத்து செய்திகளுக்கும் மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் கூறியுள்ளார். இதன் மூலம் ஹன்சிகா திருமணம் தொடர்பாக வெளியான செய்திகள் அனைத்தும் வதந்தி என்பது உறுதியாகியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்