ஆப்நகரம்

சொந்தமாக பங்களா வாங்கியிருக்கும் கேத்ரின் தெரசா!

நடிகை கேத்ரின் தெரசா, பல கோடி ரூபாய் செலவில் சொந்தமாக பங்களா ஒன்றை ஐதராபாத்தில் வாங்கியுள்ளார்.

Samayam Tamil 18 Jul 2018, 5:33 pm
நடிகை கேத்ரின் தெரசா, பல கோடி ரூபாய் செலவில் சொந்தமாக பங்களா ஒன்றை ஐதராபாத்தில் வாங்கியுள்ளார்.
Samayam Tamil Catherine-Tresa


நடிகை கேத்ரின் தெரசா ‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதையடுத்து விஷாலுடன் ‘கதகளி’ படத்திலும், அதர்வாவுடன் ‘கணிதன்’ படத்திலும், ஆர்யாவுடன் ‘கடம்பன்’ மற்றும் ‘கலகலப்பு 2’ படத்திலும் நடித்துள்ளார்.

தமிழுக்குமுன்பு இவர் தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் நடித்துவந்தார். இவர் துபாயில் பிறந்து வளர்ந்தவர். பள்ளிப்படிப்பை துபாயில் முடித்தார். இந்தியா வந்து கல்லூரி படிப்பை பெங்களூரில் முடித்தார்.

இவர் படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் தங்குவதற்கு வீடில்லாமல் தவித்து வந்தார். அந்த சமயத்தில் நட்சத்திர ஓட்டல்களில் தங்கி படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இந்நிலையில் சொந்தமாக பங்களா வாங்க நினைத்தார். தமிழ் படங்களைவிட தெலுங்கில் அதிக படங்களில் நடித்து வருவதால் அவர் அங்கு பங்களா வாங்க முடிவு செய்தார்.

அதன்படி தற்போது ஐதராபாத்தில் கோகாபேட் பகுதியில் பல கோடி கொடுத்து பங்களா ஒன்று வாங்கியிருக்கிறார். ஏற்கனவே இவர் பங்களா வாங்கியிருக்கும் பகுதியில் நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங், ராசி கண்ணா போன்றவர்கள் சொந்தமாக பங்களா வாங்கி அதில் வசித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்