ஆப்நகரம்

'மேயாத மான்' தங்கச்சி இப்போ ஹீரோயின் ஆகியாச்சு!

'மேயாத மான்' படத்தில் வைபவின் தங்கையாக நடித்த இந்துஜா, பில்லா பாண்டி' நாயகியாக அறிமுகமாகிறார்.

TNN 12 Nov 2017, 11:25 am
'மேயாத மான்' படத்தில் வைபவின் தங்கையாக நடித்த இந்துஜா, பில்லா பாண்டி' நாயகியாக அறிமுகமாகிறார்.
Samayam Tamil actress induja act as a heroine role in billa pandi movie
'மேயாத மான்' தங்கச்சி இப்போ ஹீரோயின் ஆகியாச்சு!


நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த இந்துஜா, 'மேயாத மான்' பட ஆடிஷனில் கலந்துகொண்டு படத்தில் நடிக்கத் தேர்வானார். அதில் ஹீரோயினாக நடித்த ப்ரியா பவானி ஷங்கரை விட இந்துஜா நடித்த கேரக்டர் தான் அதிகம் பேசப்பட்டது.

நார்த் மெட்ராஸ் பெண்ணாக நைட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு இவர் போட்ட ஆட்டத்தை அனைவரும் ரசித்தனர். இதனால் படம் வெளிவருவதற்கு முன்பே ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது.

தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் ஹீரோவாக நடிக்கும் 'பில்லா பாண்டி' படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் இந்துஜா. 'மேயாத மான்' படத்தில் சென்னை பெண்ணாக கலக்கியவர் இதில் மதுரைக்காரப் பெண்ணாக கலக்க இருக்கிறார். சுத்த தமிழ் பேசும் இன்னொரு நடிகையாக வளர்ந்து வருகிறார். பில்லா பாண்டி படத்தின் மூலம் கோலிவுட்டை ஒரு கலக்கு கலக்க காத்திருக்கிறார் இந்துஜா.

அடுத்த செய்தி

டிரெண்டிங்