ஆப்நகரம்

இனியாவுக்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போனது!

நடிகை இனியாவுக்கு உடல் எடை கூடியதன் காரணமாக அவருக்கு பட வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகிறது.

TNN 10 Nov 2016, 6:14 pm
நடிகை இனியாவுக்கு உடல் எடை கூடியதன் காரணமாக அவருக்கு பட வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகிறது.
Samayam Tamil actress iniya missed a acting chance due to overweight
இனியாவுக்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போனது!


நடிகை இனியா ‘வாகை சூடவா’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் ஒரு சில படங்களில் நடித்தார். ஆனால், அவருக்கு சொல்லிக் கொள்ளும் அளவில் எந்தப் படமும் அமையவில்லை. அதனால் கதாநாயகி வாய்ப்பு கிடைக்கால் கிடைத்த கேரக்டர்களிலும்,குத்துப் பாடல்களிலும் நடித்தார். எந்த மாதிரியான கேரக்டர் என்றாலும் ஓகே என்று சொல்லி தற்போது சில படங்களில் நடித்து வருகிறார்.

இதில் வடிவுடையான் இயக்கிவரும் ‘பொட்டு’ படத்தில் நமீதாவுக்கு அகோரி வேடம் என்றால், இனியா ஒரு அதிரடியான நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் தமிழில் நடித்துக்கொண்டே தெலுங்கிலும் கால் பதிக்க நினைத்தார் இனியா. இதற்காக ஐதராபாத்தில் முகாமிட்டு வாய்ப்பு தேடி வந்தார். அதன் பயனாக ஒரு புதுமுக நடிகருக்கு ஜோடியாக கமிட்டான போதும், போட்டோ செஷனுக்குப் பிறகு உடல் எடை அதிகமாக இருப்பதாக கூறி இனியாவை நீக்கி விட்டனர். தற்போது கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போனதால் அதிக வருத்தத்துடன் கேரளா சென்று விட்டார் இனியா. தற்போது தீவிரமாக உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் நடிகை இனியா.

Actress Iniya missed a acting chance due to overweight

அடுத்த செய்தி

டிரெண்டிங்