நடிகை இனியாவின் தங்கை ஸ்வாதி, ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.
ஹெவன் என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் படம், ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’. இந்தப் படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். படத்தை ரஜாக், இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகை இனியா தங்கை ஸ்வாதி ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் படத்தில் இன்னொரு ஹீரோயினாக அஸ்மிதா நடிக்கிறார்.
மேலும் படத்தில் கே.பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.வி.உதயகுமார், மன்சூர் அலிகான், அனுமோகன், ராஜ்கபூர், டாக்டர் சீனிவாசன், ரத்தீஷ், விஷ்வா, கண்ணன், ராஜ், திவ்யா உள்பட 4,500 துணை நடிகர்கள் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் 6 இயக்குனர்கள் நடிக்கின்றனர். ஆதரவற்ற 4 முதியவர்களுக்கு, அதிக தொகைக்கு பெரிய வேலை கிடைக்கிறது. அதை முடிக்க, 4 முட்டாள் இளைஞர்களின் உதவியை நாடுகின்றனர். இளைஞர்களின் செயல்களால், முதியவர்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகின்றனர். அந்தப் பழியிலிருந்து அவர்கள் எப்படி மீண்டனர் என்பது கதை. காமெடி கலந்த த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது.