ஆப்நகரம்

பழைய டி-சர்ட்டை இப்படியும் மாற்றலாம்: வீடியோ வெளியிட்ட வரலாறு பட ஹீரோயின் கனிஹா

வீட்டில் இருக்கும் பழைய டிசர்ட்டை வைத்து தான் செய்த பை பற்றி வீடியோ வெளியிட்டுள்ளார் நடிகை கனிஹா.

Samayam Tamil 7 Apr 2020, 9:38 am
கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் அதிக பரவ துவங்கியுள்ளதால் மத்திய அரசு இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்கின்றனர்.
Samayam Tamil Kaniha


சினிமா நட்சத்திரங்களும் தங்கள் வீடுகளுக்கு உள்ளேயே இருக்கின்றனர். வீட்டிலேயே இருங்கள் என மற்றவர்களுக்கும் அவர்கள் வீடியோ வெளியிட்டு அறிவுரை கூறி வருகின்றனர்.

மேலும் அவர்கள் வீடுகளுக்கு உள்ளேயே செய்யும் பல விஷயங்களை வீடியோ எடுத்து வெளியிட்டு வருகின்றனர். சில நடிகைகள் வீட்டை சுத்தம் செய்வது, ஒர்கவுட் செய்வது என பல்வேறு விஷயங்களை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது பிரபல மலையாள நடிகை கனிஹா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். தல அஜித்தின் வரலாறு படத்தில் நடித்தவர் தான் கனிஹா. வீட்டை சுத்தம் செய்தபோது கிடைத்த ஒரு பழைய டி-சர்ட்டை அவர் கைப்பைய்யாக மாற்றியுள்ளார். அதை எப்படி செய்தார் என்பதை தான் வீடியோவாக காட்டியுள்ளார்.

View this post on Instagram You must be organizing your wardrobes and have lots of old tee shirts.. Why throw em when you can use them to make cute DIY bags. Here's a video for you❤ Say no to plastic!! I made about 10 bags Planning to give it to ma friends and family when this lockdown gets over🙂🙃 Planning to show you more hacks in the coming days. stay tuned!! #stayhome #diybag #oldteeshirt #kaniha A post shared by Kaniha (@kaniha_official) on Apr 5, 2020 at 10:06pm PDT

இப்படி செய்வதால் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கலாம் என்ற கருத்தையும் அவர் கூறியுள்ளார். இதுபோன்று பத்து பைகளை செய்து வைத்திருப்பதாகவும், ஊரடங்கு முடிந்தபிறகு அதை தனது தோழிகள் மற்றும் உறவினர்களுக்கு கொடுக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கனிஹாவின் இந்த செயலுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்