ஆப்நகரம்

அனிதா தற்கொலை: கண்ணீர் விட்டு கதறி அழுத பிரபல நடிகை

மருத்துவக் கனவு பறிக்கப்பட்ட நிலையில் தற்கொலை செய்து கொண்ட டாக்டர் அனிதாவிற்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

TNN 2 Sep 2017, 5:52 pm
மருத்துவக் கனவு பறிக்கப்பட்ட நிலையில் தற்கொலை செய்து கொண்ட டாக்டர் அனிதாவிற்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Samayam Tamil actress kasthuri crying for anithas suicide
அனிதா தற்கொலை: கண்ணீர் விட்டு கதறி அழுத பிரபல நடிகை


நீட் தேர்வுக்கு எதிராக தனியாக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனிதாவின் தற்கொலை குறித்து அரசியல் பிரமுகர்களும், சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நடிகை கஸ்தூரி டுவிட்டரில் கொந்தளித்துள்ளார். நீட் என்றாலே அனிதா உயிர் நீத்த துயரம் தான் நினைவுக்கு வரும். உயர பறக்க வேண்டிய் பட்டாம்பூச்சி உயிர் பிரிந்து வீழ்ந்துவிட்டது. அந்த பிஞ்சுப் பெண்ணிற்கு என் அஞ்சலி கண்ணீர் என்று கூறியுள்ளார். மேலும், டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்க போகிறீர்கள்? 1176/1200 எடுத்தவள் வாழ்க்கை 0/18 பதினெட்டில் சூனியம் ஆகிவிட்டது. 1/2 #NEETkillsAnitha pic.twitter.com/5x5ZRtLyTB — kasturi shankar (@KasthuriShankar) September 1,   2017 எதேச்சதிகார மத்திய அரசும் தலையாட்டி பொம்மை மாநில அரசும் சேர்ந்து கொன்னே போட்டுடீங்களேய்யா !!! வயிறு எரிகிறது. இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்க போகிறீர்கள்? 1176/1200 எடுத்தவள் வாழ்க்கை 0/18 பதினெட்டில் சூனியம் ஆகிவிட்டது. மேலும், தனியார் நிகழ்ச்சி ஒன்றிற்கு பேட்டியளித்த கஸ்தூரி கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். அதில், ஏழைகள் கனவு காணக்கூடாதா? அனிதா ஆசைப்பட்டது குற்றமா? என்று தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். எதேச்சதிகார மத்திய அரசும் தலையாட்டி பொம்மை மாநில அரசும் சேர்ந்து கொன்னே போட்டுடீங்களேய்யா !!! வயிறு எரிகிறது. #NEETkillsAnitha — kasturi shankar (@KasthuriShankar) September 1, 2017

அடுத்த செய்தி

டிரெண்டிங்